உள்ளூர் செய்திகள்

கண்ணாடி உடைக்கப்பட்ட பஸ்சிற்கு ஆதரவாக நிறுத்தப்பட்ட மற்ற அரசு டவுன் பஸ்களை படத்தில் காணலாம்.

கம்மாபுரத்தில் நிற்காமல் சென்றஅரசு பஸ் மீது கல் வீசி கண்ணாடி உடைப்புபஸ்கள் நிறுத்தம் - பயணிகள் அவதி

Published On 2023-10-09 15:20 IST   |   Update On 2023-10-09 15:20:00 IST
  • பஸ் கம்மாபுரம் அரசு ஆஸ்பத்திரி பஸ் நிறுத்தத்தில் நிற்காமல் சென்றது.
  • பஸ் நிறுத்திய டிரைவர், பின்பக்கம் வந்து பார்த்து, உயரதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தார்.

கடலூர்:

சேத்தியாத்தோப்பில் இருந்து பயணிகளை ஏற்றிக் கொண்டு அரசு டவுன் பஸ் ஒன்று இன்று காலை விருத்தாசலத்திற்கு புறப்பட்டது. இந்த பஸ் கம்மாபுரம் அரசு ஆஸ்பத்திரி பஸ் நிறுத்தத்தில் நிற்காமல் சென்றது.இதனால் ஆத்திரமடைந்த மர்மநபர், பஸ்சின் மீது கற்களை வீசியுள்ளார். இது பஸ்சின் பின்பக்க கண்ணாடி உடைந்து நொறுங்கியது. இந்த திடீர் நிகழ்வால் பஸ்சில் பயணம் செய்தவர்கள் அலறினர்.பஸ் நிறுத்திய டிரைவர், பின்பக்கம் வந்து பார்த்து, உயரதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தார். இந்த பஸ்சினை பின்தொடர்ந்து வந்த மற்றொரு டவுன் பஸ் டிரைவரும், பஸ்சினை ஓரங்கட்டி நிறுத்தினார்.கல்வீசிய மர்மநபரை கைது செய்தால் மட்டுமே பஸ்சினை எடுப்போமென 2 பஸ் டிரைவர்களும் கூறினர். இதனால் வேலைக்கு செல்வதற்காக பஸ்சில் வந்த பயணிகள் செய்வதறியாது திகைத்தனர். தகவல் அறிந்து விரைந்து வந்த கம்மாபுரம் போலீசார், அரசு பஸ் டிரைவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

இந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமரா பதிவுகளை ஆய்வு செய்து, சம்பந்தப்பட்டவரை பிடித்து விடுவோம். நீங்கள் பயணிகளின் நலன் கருதி பஸ்சினை இயக்குங்கள் என்று போலீசார் கூறினர்.இதனை ஏற்ற அரசு டவுன் பஸ் டிரைவர்கள், அங்கிருந்து பஸ்சினை இயக்கினர். இதையடுத்து பஸ்சில் வந்த பயணிகள் நிம்மதி பெருமூச்சு விட்டபடி பயணம் செய்தனர். இந்த திடீர் சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.

Tags:    

Similar News