உள்ளூர் செய்திகள்

கலெக்டர் ரவிச்சந்திரன் தலைமையில் ஆய்வு கூட்டம் நடந்த போது எடுத்தபடம்.

தென்காசியில் வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடு தொடர்பான ஆய்வு கூட்டம்

Published On 2023-09-22 14:48 IST   |   Update On 2023-09-22 14:48:00 IST
  • சாலையோரங்கில் உள்ள மரம், மின்கம்பி ஆகிய வற்றை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பழுது பார்க்க வேண்டும்.
  • மாவட்டத்தில் 17 தாழ்வான பகுதிகள் கண்டறியப்பட்டுள்ளது.

தென்காசி:

தென்காசி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் கலெக்டர் ரவிச்சந்திரன் தலைமையில் வடகிழக்கு பருவமழை குறித்து ஆய்வு கூட்டம் அனைத்துதுறை அலுவ லர்களுடன் நடைபெற்றது. கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் பேசியதாவது:-

முன்னெச்சரிக்கை நடவடிக்கை

அரசு கட்டிடங்கள், சாலையோரங்கில் உள்ள மரம், மின்கம்பி ஆகியவற்றை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பழுது பார்க்க வேண்டும். நெடுஞ்சாலைகளில் உள்ள மரங்களின் தேவையற்ற கிளைகளை அகற்ற வேண்டும். நுகர்பொருள் வாணிப கழகத்தின் மூலம் அன்றாட பொருட்கள் தங்குதடையின்றி கிடைத்திட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

பொது சுகாதார துறையின் மூலம் தேவையான மருந்துகள் இருப்பில் வைத்திருக்க வேண்டும். கால்நடை பராமரிப்பு துறை ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைக ள் இறப்புகள் குறித்து உடனடியாக கணக்கெடுப்பு எடுத்து நிவாரண உதவி வழங்க தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும். நமது மாவட்டத்தில் 17 தாழ்வான பகுதிகள் கண்டறியப்பட்டுள்ளது.

மழைகாலங்களில் ....

அப்பகுதிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டு முகாம்களில் தங்க வைக்கப்படும். பொது மக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருள்கள் கிடைத்திட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மேலும் மழைகாலங்களில் பொது மக்களுக்கு வழங்கப்படும் குடித்தண்ணீரில் குளோரின் கலந்த குடித்தண்ணீரை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். அனைத்துறை அலுவலர்களும் வருகின்ற வடகிழக்கு பருவமழையினை உரிய முன்னேற்பாடுகளுடன் எதிர்கொண்டு இயற்கை இன்னல்களில் இருந்து பொதுமக்களை பாதுகாத்திட வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் பத்மாவதி, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) சேக், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் மைக்கேல் அந்தோனி பெர்னாண்டோ, உதவி மக்கள் தொடர்பு அலுவலர் (செய்தி) ராமசுப்பிர மணியன் மற்றும் அனைத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News