உள்ளூர் செய்திகள்
ஜாரிகொண்டலாம்பட்டியில் சாக்கடையில் பிணமாக மிதந்த வாலிபர் போலீசார் விசாரணை
- சாக்கடையில் சுமார் 40 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் பிணமாக கிடந்தார்.
- கொண்டலாம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து, வாலிபர் உடலை கைப்பற்றி சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
சேலம்:
சேலம் ஜாரி கொண்டலாம்பட்டி அரசு பெண்கள் மேல் நிலைப்பள்ளி இடதுபுற காம்பவுண்ட் சுவரில் ஒட்டிய நிலையில் உள்ள சாக்கடையில் சுமார் 40 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் பிணமாக கிடந்தார். அவர் புளூ, வெள்ளை நிறம் கலந்த கட்டம் போட்ட முழுக்கை சட்டையும், பச்சை, கருப்பு, வெள்ளை நிறம் கலந்த லுங்கியும் அணிந்தவாறு சாக்கடையில் தலைக்குப்புற கவிழ்ந்த நிலையில் இறந்து கிடந்தார்.
இது குறித்து ஜாரிகொண்ட லாம்பட்டி கிராம நிர்வாக அலுவலர் கொடுத்த புகாரின்பேரில் கொண்டலாம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து, வாலிபர் உடலை கைப்பற்றி சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இறந்த வாலிபர் பெயர் மற்றும் அவருடைய ஊர் முகவரி தெரியவில்லை. இதனால் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்க முடியாத நிலை போலீசாருக்கு ஏற்பட்டுள்ளது. இந்த தகவலை போலீசார் தெரிவித்துள்ளனர்.