உள்ளூர் செய்திகள்

விழாவில் கலந்து கொண்ட பக்தர்களை படத்தில் காணலாம்.


கோவில்பட்டி புற்றுக்கோவிலில் கந்த சஷ்டி திருவிழா

Published On 2022-10-31 09:13 GMT   |   Update On 2022-10-31 09:13 GMT
  • கோவில்பட்டி புற்றுக்கோவிலில் கந்த சஷ்டி திருவிழா கடந்த 25-ந் தேதி தொடங்கியது.
  • ஸ்ரீவள்ளி தேவசேனா சமேத கல்யாண முருகனுக்கு திருக்கல்யாணம் நடைபெற்றது.

கோவில்பட்டி:

கோவில்பட்டி சங்கரேஸ்வரி அம்பாள் புற்றுக்கோவிலில் கந்த சஷ்டி திருவிழா கடந்த 25-ந் தேதி தொடங்கியது. இதனையொட்டி தினமும் காலையில் சங்கல்பம், விக்னேஸ்வர பூஜை, ஸ்பதன கும்ப கலச பூஜை, யாகசாலை பூஜை, கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், பூர்ணாகுதி தீபாராதனை நடைப்பெற்றது. அதனை தொடர்ந்து ஸ்ரீவள்ளி தேவசேனா சமேத கல்யாண முருகனுக்கு 18 வகையான சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதணை நடைபெற்றது. நேற்று சஷ்டி நிறைவு விழாவாக காலை 10 மணிக்கு சிறப்பு அபிஷேக சந்தனகாப்பு அலங்கார தீபாராதனை நடைப்பெற்றது.

இன்று காலை ஸ்ரீவள்ளி தேவசேனா சமேத கல்யாண முருகனுக்கு திருக்கல்யாணம் நடைபெற்றது. நாளை புஷ்பாஞ்சலி சாந்தாபிஷேகம் நடைபெறுகிறது. பூஜைகளை சுப்பிரமணி அய்யர், செய்திருந்தார். விழாவில் கோவில் தலைவர் ராஜபாண்டி, பொருளாளர் சுப்பிரமணி, நிர்வாக கமிட்டி உறுப்பினர்கள் மற்றும் சுற்றுவட்டார மக்கள் திரளாக கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு இனிப்பு பிரசாதம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை தேவகி, ரவிநாரயணன், பிரேமா முருகன், சீதா எட்டப்பன் ஆகியோர் செய்திருந்தனர்.

Tags:    

Similar News