உள்ளூர் செய்திகள்
நாகர்கோவிலில் கழிவு பொருட்கள் ஏற்றி வந்த டெம்போ உரிமையாளருக்கு ரூ.50 ஆயிரம் அபராதம்
- டெம்போ மாநகராட்சி அலுவலகத்திற்கு கொண்டு வரப்பட்டது.
- மாநகராட்சி அதிரடி நடவடிக்கை
நாகர்கோவில்:
நாகர்கோவில் மாநகரப் பகுதியில் சுகாதாரத்தை பேணிக்காக்க பல்வேறு நடவடிக்கைகள் மாநகராட்சி சார்பில் மேற்கொள்ள ப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் தெங்கம் புதூர் பகுதியில் மினி டெம்போவில் கழிவு பொருட்கள் ஏற்றி கொண்டு வரப்பட்டதாக மாநகராட்சி அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.
அதன் பேரில் மாநகராட்சி சுகாதார ஆய்வாளர் ராஜா தலைமையிலான குழுவினர் அங்கு விரைந்து சென்று டெம்போவை பிடித்தனர். பின்னர் டெம்போ மாநகராட்சி அலுவல கத்திற்கு கொண்டு வரப்ப ட்டது. தொடர்ந்து டெம்போ உரிமையாளருக்கு ரூ.50 ஆயிரம் அபராதம் விதிக்க ப்பட்டது.