உள்ளூர் செய்திகள்

கோப்பு படம் 

கன்னியாகுமரி அருகே கடையை உடைத்து ரூ.50 ஆயிரம், செல்போன் கொள்ளை

Published On 2022-10-09 10:52 GMT   |   Update On 2022-10-09 10:52 GMT
  • மேற்கூரையை பிரித்து மர்ம நபர்கள் கைவரிசை
  • சி.சி.டி.வி. காமிரா காட்சிகளை போலீசார் கைப்பற்றி விசாரணை

கன்னியாகுமரி:

கன்னியாகுமரி அருகே உள்ள கிருஷ்ணன் புதூரை சேர்ந்தவர் ராமலிங்கம் (வயது 39). இவர் கன்னியாகுமரியை அடுத்த விவேகானந்தபுரம் அருகே உள்ள மாதவபுரம் பகுதியில் சூப்பர் மார்க்கெட் கடை நடத்தி வருகிறார்.

சம்பவத்தன்று நள்ளிரவு 11 மணிக்கு அவர் கடையை பூட்டி விட்டு வீட்டுக்கு சென்று விட்டார். பின்னர் அவர் காலை அவர் கடையை திறந்து பார்த்தபோது கடையின் உள்ளே உள்ள அறைக்கதவின் பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. இதைக் கண்டு திடுக்கிட்ட ராமலிங்கம் உள்ளே சென்று பார்த்தபோது அங்கு இருந்த ரூ.50 ஆயிரம் மற்றும் செல்போன் திருடப்பட்டிருந்தது தெரிய வந்தது. அந்தக் கடையின் மேல் கூரையை பிரித்து யாரோ மர்ம நபர்கள் உள்ளே புகுந்து கைவரிசை காட்டியது தெரிய வந்தது.

இது குறித்து கன்னியாகுமரி போலீசில் ராமலிங்கம் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள். தடைய வியல் நிபுணர்களும் அங்கு வரவழைக்கப்பட்டு அங்கு பதிவாகி இருந்த தடயங்களை பதிவு செய்தனர். மேலும் அந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி. காமிரா காட்சிகளை போலீசார் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகிறார்கள். ஏற்கனவே கடந்த 3 நாட்களுக்கு முன்பு கன்னியாகுமரி சன்னதி தெருவில் உள்ள பேன்சி கடையை உடைத்து ரூ. 1¾ லட்சம் கொள்ளை போனது. இந்த தொடர் சம்பவத்தினால் கன்னியாகுமரி பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.

Tags:    

Similar News