உள்ளூர் செய்திகள்

கன்னியாகுமரி வெங்கடாஜலபதி கோவிலில் தீபாவளி ஆஸ்தானம்

Published On 2023-11-09 14:16 IST   |   Update On 2023-11-09 14:16:00 IST
  • 12-ந்தேதி நடக்கிறது
  • மாலையில் தோமாலை சேவையும் இரவு ஏகாந்த சேவையும் நடக்கிறது.

கன்னியாகுமரி, நவ.9-

கன்னியாகுமரி விவேகானந்தபுரத்தில் உள்ள விவேகானந்த கேந்திர கடற்கரை வளாகத்தில் திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில் வெங்கடாஜலபதி கோவில் கட்டப்பட்டு உள்ளது.

இங்கு ஐப்பசி மாதத்தில் வரும் நரக சதுர்த்தி அன்று தீபாவளி ஆஸ்தானம் திருப்பதியை போன்று நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு தீபாவளி ஆஸ்தானம் நிகழ்ச்சி வருகிற 12-ந்தேதி நடக்கிறது.

இதையொட்டி அன்று காலையில் சுப்ரபாதம் நிகழ்ச்சியும் அதைத் தொடர்ந்து விசேஷ பூஜைகள் மற்றும் சிறப்பு வழிபாடுகள் நடக்கிறது. பின்னர் சுவாமிக்கு புதிய பட்டாடை அணிவித்து பல வண்ண மலர்களால் அலங்கரித்து பூலங்கி சேவை நடக்கிறது. அதைத்தொடர்ந்து அலங்கார தீபாராதனையும் அர்ச்சகர்கள் பாராயணம் பாடும் நிகழ்ச்சியும் நடக்கிறது. மாலையில் தோமாலை சேவையும் இரவு ஏகாந்த சேவையும் நடக்கிறது.

இதற்கான ஏற்பாடுகளை கன்னியாகுமரி திருமலை திருப்பதி தேவஸ்தான வெங்கடாஜலபதி கோவில் ஆய்வாளர் ஹேமதர்ரெட்டி தலைமையில் பக்தர்கள் செய்து வருகிறார்கள்.

Tags:    

Similar News