தேங்காப்பட்டணம் துறைமுகத்தில் கடலில் மீன் பிடித்து திரும்பிய போது படகு கவிழ்ந்து மீனவர் சாவு - முகத்துவாரத்தில் மணல் மூடி கிடந்ததால் விபத்து
- துறைமுக நுழைவு வாயிலில் மணல் திட்டு அடிக்கடி ஏற்படுவதால், படகுகள் விபத்தில் சிக்கி வருகின்றன
- சைமன் வந்த பைபர் படகு எதிர்பாராதவிதமாக மணல் திட்டில் தட்டியதோடு துறைமுக தடுப்புச் சுவரிலும் மோதி யது
கன்னியாகுமரி :
குமரி மாவட்டம் கருங்கல் அருகே தேங்காப் பட்டணம் துறைமுகம் உள்ளது. இங்கிருந்து சுமார் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பைபர் விசைப்படகுகள் கடலுக்கு மீன் பிடிக்கச் செல்கின்றன.
இந்த துறைமுக நுழைவு வாயிலில் மணல் திட்டு அடிக்கடி ஏற்படுவதால், படகுகள் விபத்தில் சிக்கி வருகின்றன. கடந்த 2 நாட்களுக்கு முன்பு மணல் திட்டில் தட்டி, துறைமுக தடுப்பு சுவரில் மோதியதில் ஒரு பைபர் படகு சேதமடைந்தது.
நேற்றும் ஒரு பைபர் படகு இதுபோல் விபத்தில் சிக்கி கடலில் கவிழ்ந்தது. அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் உயிர்சேதம் எதுவும் ஏற்படவில்லை. அடிக்கடி விபத்தை ஏற்படுத்தும் மணல் திட்டை அகற்ற வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இந்த நிலையில் இன்று அதிகாலை ஒரு பைபர் படகு இதுபோல விபத்தில் சிக்கியதில் மீனவர் ஒருவர் பலியாகி உள்ளார். இது பற்றிய விவரம் வருமாறு:-
பூத்துைற 19-வது அந்தி யம் பகுதியைச் சேர்ந்தவர் சைமன் (வயது 48), மீனவர். இவர் இன்று அதிகாலை ஒரு பைபர் படகில் 4 பேருடன் கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றார். மீன் பிடித்து விட்டு காலை 7.30 மணியளவில் அவர்கள் கரை திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது காற்றின் வேகமும் அலையின் சீற்றமும் அதிகமாக இருந்தது.
அந்த நேரத்தில் சைமன் வந்த பைபர் படகு எதிர்பாராதவிதமாக மணல் திட்டில் தட்டியதோடு துறைமுக தடுப்புச் சுவரிலும் மோதி யது. இதனால் நிலை தடுமாறிய படகு கடலில் கவிழ்ந்தது.
இந்த சம்பவத்தில் கடலில் தவறி விழுந்த சைமன், வலைக்குள் சிக்கிக் கொண்டார். இதனால் நீரில் மூழ்கிய அவர் பரிதாபமாக இறந்தார். அவரது உடலை சக மீனவர்கள் மீட்டு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.
பலியான சைமனுக்கு, சொர்ணம் என்ற மனை வியும், 2 மகள்கள் மற்றும் ஒரு மகனும் உள்ளனர்.