கன்னியாகுமரி மாவட்டத்தில் விநாயகர் சிலைகள் 2 இடங்களில் இருந்து ஊர்வலம்
- கன்னியாகுமரி, குழித்துறை ஆற்றில் கரைக்கப்படுகிறது
- விநாயகர் சிலை ஊர்வலத்தின் போது அரசின் கட்டுப்பாடுகளை சரியாக கடைபிடிக்க வேண்டும்
நாகர்கோவில்:
இந்துக்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான விநாயகர் சதுர்த்தி விழா குமரி மாவட்டத்தில் கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
இந்து முன்னணி, இந்து மகா சபா, சிவசேனா, பாரதிய ஜனதா மற்றும் இந்து அமைப்புகள் சார்பில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. பொது இடங்களில் 1250-க்கு மேற்பட்ட இடங் களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.
கோவில்கள், வீடுகள் என 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இடங்களில் சிலை களை பிரதிஷ்டை செய்து உள்ளனர். பிரதிஷ்டை செய்யப்பட்ட சிலைகளுக்கு தினமும் காலை, மாலை நேரங்களில் பூஜைகள் செய்யப்பட்டு வருகிறது. போலீசாரும் பிரதிஷ்டை செய்யப்பட்ட பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இன்று முதல் மூன்று நாட்கள் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு நீர் நிலைகளில் கரைக்கப்ப டுகிறது. சிலைகளை கரைப்ப தற்கு மாவட்ட நிர்வாகம் 10 இடங்களில் அனுமதி வழங்கி உள்ளது. கன்னியாகுமரி, பள்ளிகொண்டான் அணை, வெட்டுமடை, மிடலாம், தேங்காய்பட்டணம், திற்பரப்பு அருவி, தாமிர பரணி ஆறு உள்பட 10 இடங்களில் அனுமதி வழங்கி உள்ளது.
இன்று சிவசேனா சார்பில் பிரதிஷ்டை செய்யப்பட்ட சிலைகள் ஊர்வலமாக எடுத்து செல் லப்பட்டு கரைக்கப்படு கிறது. இதை யடுத்து நாகர்கோவில் மாநகரப் பகுதியில் பிரதிஷ்டை செய் யப்பட்டிருந்த சிலைகள் இன்று காலையில் பூஜை கள் செய்யப்பட்டு பிறகு டிராக்டர் மற்றும் மினி டெம்போக்களில் ஏற்றி னார்கள். பின்னர் நாகர்கோவில் நாகராஜா கோவி லுக்கு நாகராஜா கோவில் திடலுக்கு கொண்டு வந்தனர். இங்கி ருந்து விநாயகர் சிலைகள் ஊர்வலமாக இன்று மாலை புறப்பட்டு செல்கிறது.
கோட்டார், இடலாக்குடி, சுசீந்திரம், ஈத்தங்காடு, வழுக்கம்பாறை, கொட்டா ரம், விவேகானந்தபுரம் வழியாக கன்னியாகுமரி சென்றடைகிறது. அங்கு கடற்கரையில் சிலை களுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு சிலைகள் கரைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது.
இதேபோல் மேல்புறம் பகுதியில் இருந்து புறப்படும் விநாயகர் ஊர்வலம் குழித்துறை தாமிரபரணி ஆற்றிற்கு கொண்டு செல் லப்படுகிறது. அங்கு ஆற்றங்க ரையில் விநாயகர் சிலைகளுக்கு பூஜைகள் செய்யப்பட்டு கரைக்கப்ப டுகிறது. விநாயகர் சிலை கள் கரைக்கப்படும். கன்னி யாகுமரி, குழித்துறை தாமிர பரணி ஆறு பகுதிகளில் பேரூராட்சி, நகராட்சி நிர்வாகம் சார்பில் அடிப் படை வசதிகள், மின்வி ளக்கு வசதிகள் செய்யப்பட்டுள்ளது.
மேலும் விநாயகர் சிலைகள் கரைக்கப்படும் பகுதிகளில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் உத்தர வின் பேரில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடுவதற்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
விநாயகர் சிலை ஊர்வ லத்தின்போது அரசின் கட்டுப்பாடுகளை சரியாக கடைபிடிக்க வேண்டும் என்று போலீசார் அறிவு றுத்தி உள்ளனர். ஊர்வலம் நடைபெறும் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைகளை அடைப்பதற்கும் கலெக்டர் அரவிந்த் உத்தரவிட்டு உள்ளார்.