உள்ளூர் செய்திகள்
குளச்சலில் கடையின் பூட்டை உடைத்து பணம் கொள்ளை
- குளச்சல் களிமார் பாலம் அருகில் பழக்கடையில் ஷட்டரின் பூட்டு உடைக்கப்பட்டு ரூ.22 ஆயிரம் திருட்டு.
- குளச்சல் போலீசார் சம்பவம் இடம் விரைந்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
கன்னியாகுமரி:
குளச்சல்மார்க்கெட் ரோட்டைச் சேர்ந்தவர் ராஜேஷ் (வயது 45). இவர் களிமார் பாலம் அருகில் பழக்கடை நடத்தி வருகிறார். நேற்று இவர் வியாபாரம் முடிந்ததும் இரவில் கடையை பூட்டிச் சென்றார். வழக்கம்போல் இன்று காலை 8 மணிக்கு ராஜேஷ் கடையை திறக்க வந்தார்.
அப்போது கடை ஷட்டரின் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்துள்ளது. இதனைக் கண்டு அவர் அதிர்ச்சியடைந்தார். உள்ளே சென்று பார்க்கும்போது மேசை டிராயரில் வைத்து சென்ற ரூ.22 ஆயிரம் திருட்டு போயிருந்தது தெரிய வந்தது.
இது குறித்து ராஜேஷ் குளச்சல் போலீசில் புகார் செய்தார்.போலீசார் சம்பவம் இடம் விரைந்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.