உள்ளூர் செய்திகள்

நாகர்கோவில் கலெக்டர் அலுவலக வளாகத்தில் சகோதரிகள் தீக்குளிக்க முயற்சி - உடலில் பெட்ரோல் ஊற்றியதால் பரபரப்பு

Published On 2022-07-25 15:21 IST   |   Update On 2022-07-25 15:21:00 IST
  • கலெக்டர் அலுவலக வளாகத்திற்குள் இருவரும் தாங்கள் மறைத்து வைத்திருந்த பெட்ரோலை உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்றனர்
  • என்னை பாலியல் ரீதியாக சிலர் துன்புறுத்துவதுடன் சொத்தையும் அபகரிக்க முயற்சி மேற்கொண்டு வருகிறார்கள்.

நாகர்கோவில் :

இரணியல் பகுதியை சேர்ந்த 15 வயது சிறுமி தனது சகோதரியுடன் நாகர்கோவில் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தார்.

கலெக்டர் அலுவலக வளாகத்திற்குள் இருவரும் தாங்கள் மறைத்து வைத்தி ருந்த பெட்ரோலை உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்றனர். இதை பார்த்த கலெக்டர் அலுவலக ஊழியர்களும் போலீசாரும் சிறுமிகள் உடல் மீது தண்ணீரை ஊற்றி தீ பற்ற விடாமல் தடுத்தனர்.

இதைத்தொடர்ந்து சிறுமிகளிடம் போலீசார் விசாரணை மேற்கொண்ட னர். அப்போது அவர்கள் கூறுகையில், எனது தாயும் தந்தையும் கடந்த 11 ஆண்டுகளாக பிரிந்து வாழ்ந்து வருகிறார்கள்.

நானும் எனது தங்கையும் தாயாருடன் வசித்து வருகிறோம். எனது தாயார் தற்பொழுது உடல்நலம் பாதிக்கப்பட்டு ஆசாரிப்பள்ளம் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். என்னை பாலியல் ரீதியாக சிலர் துன்புறுத்துவதுடன் சொத்தையும் அபகரிக்க முயற்சி மேற்கொண்டு வருகிறார்கள். இது தொடர்பாக சட்ட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றார். இதையடுத்து போலீசார் அந்த சிறுமியை வேனில் ஏற்றி போலீஸ் நிலையத்திற்கு கொண்டு சென்றனர். அங்கு அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

கலெக்டர் அலுவ லகத்தில் சகோதரிகள் 2 பேர் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே கலெக்டர் அலுவலகத்திற்குள் திங்கட் கிழமைகளில் மனு கொடுக்க வரும் பொதுமக்கள் தீக்குளிக்க முயலும் சம்பவம் வாடிக்கையாக நடந்து வருகிறது.கடந்த வாரமும் மனு கொடுக்க வந்த ஒருவர் தீக்குளிக்க முயன்றார். இதையடுத்து கலெக்டர் அலுவலகத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது.கலெக்டர் அலுவலக முன் வாசலில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர். கலெக்டர் அலுவலகத்திற்கு மனு கொடுக்க வருபவர்கள் உட்பட அனைவரையும் பரிசோதித்து உள்ளே அனுப்பி வருகிறார்கள்.

இன்று கலெக்டர் அலுவலகம் வந்த சிறுமிகள் இருவரும் முன்வாசலில் பரிசோதனை நடப்பதை பார்த்ததும் அலுவலகத்தின் பின் வாசல் வழியாக வந்து தீக்குளிக்க முயன்றுள்ள னர். எனவே கலெக்டர் அலுவலகத்தின் பின் வாசல் பகுதியிலும் போலீஸ் பாதுகாப்பு போட வேண்டும் என்பது சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது.

Tags:    

Similar News