தமிழ்நாடு

எடப்பாடி பழனிசாமி உறவினர் வீட்டில் 5-வது நாளாக வருமான வரித்துறை சோதனை

Published On 2025-01-11 08:19 IST   |   Update On 2025-01-11 08:19:00 IST
  • கட்டுமான நிறுவனம், வேலங்காட்டுவலசில் உள்ள வீடு உள்ளிட்ட பகுதிகளில் 72 மணி நேரத்திற்கு மேலாக சோதனை நடத்தப்பட்டு வருகிறது.
  • ஈரோடு முள்ளாம்பரப்பில் உள்ள கட்டுமான அலுவலகத்திலும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

ஈரோடு:

ஈரோடு பூந்துறைரோடு செட்டிபாளையம் ஸ்டேட் வங்கி நகரில், முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் உறவினரான என்.ராமலிங்கம் என்பவருக்கு சொந்தமான என்.ஆர்.கட்டுமான நிறுவன அலுவலகம் செயல்படுகிறது.

இங்கு கடந்த 7-ந் தேதி முதல் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இதேபோல் அவல்பூந்துறையில் உள்ள அவரது வீடு, அம்மாபேட்டையில் உள்ள மரவள்ளி கிழங்கு அரவை ஆலை ஆகிய இடங்களிலும் சோதனை நடத்தப்பட்டது.

இந்நிலையில் என்.ஆர். கட்டுமான நிறுவனத்தில் 5-வது நாளாக வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வருகிறது. கட்டுமான நிறுவனம், வேலங்காட்டுவலசில் உள்ள வீடு உள்ளிட்ட பகுதிகளில் 72 மணி நேரத்திற்கு மேலாக சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

ரகுநாயக்கன்பாளையத்தில் ஆர்.பி.பி. கட்டுமான நிறுவன உரிமையாளர் செல்வ சுந்தரம் தொடர்புடைய இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது.

ஈரோடு முள்ளாம்பரப்பில் உள்ள கட்டுமான அலுவலகத்திலும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News