உள்ளூர் செய்திகள்
- புனிதநீராடி தீர்த்தகுடம் மற்றும் பால்குடம் எடுத்து மேள தாளம் முழங்க ஊர்வலமாக வந்த பக்தர்கள்
- அக்னி குண்டத்தில் பக்தர்கள் இறங்கி பக்தர்கள் நேர்த்திக்கடனை செலுத்தினர்
கரூர்,
தோகைமலை அருேக வெள்ளப்பட்டியில் மகாமாரியம்மன் ேகாவில் உள்ளது. இக்கோவில் திருவிழாவையொட்டி பக்தர்கள் காவிரி ஆற்றில் புனிதநீராடி தீர்த்தகுடம் மற்றும் பால்குடம் எடுத்து மேள தாளம் முழங்க ஊர்வலமாக தோகைமலை குறிஞ்சி நகர் பகவதி அம்மன் கோவிலுக்கு வந்தனர். பின்னர் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது.தொடர்ந்து இங்கிருந்து பால்குடம், காவடி எடுத்து கொண்டு தோகைமலையில் உள்ள முக்கிய வீதிகள் வழியாக வெள்ளப்பட்டி மகா மாரியம்மன் கோவிலுக்கு வந்தனர். பின்னர் கோவில் முன்பு தயாராக இருந்த அக்னி குண்டத்தில் பக்தர்கள் இறங்கி தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். திருவிழாவையொட்டி தோகைமலை தமிழ்சங்கம் சார்பில் அதன் நிறுவனர் காந்திராஜன் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினார்.