உள்ளூர் செய்திகள்

கரூர் ஸ்ரீ சாரதா நிகேதன் மகளிர் கல்லூரியில் அன்னை சாரதா தேவி ஜெயந்தி விழா

Published On 2023-01-04 15:02 IST   |   Update On 2023-01-04 15:02:00 IST
  • கரூர் ஸ்ரீ சாரதா நிகேதன் மகளிர் கல்லூரியில் அன்னை சாரதா தேவி ஜெயந்தி விழா நடைபெற்றது.
  • விழாவில் கல்லூரி மாணவிகளின் பஜனை, நாடகம், சொற்பொழிவும் நடைப்பெற்றது.

கரூர்:

கரூர் ஸ்ரீ சாரதா நிகேதன் மகளிர் கல்லூரியில் அன்னை ஸ்ரீ சாரதா தேவியாரின் 70-வது ஜெயந்தி விழா நடைப்பெற்றது. விழாவின் தொடக்கமாக காலையில் கோடங்கிப்பட்டியிலிருந்து கல்லூரிவரை மாணவிகளின் பேரணி நடைப்பெற்றது. கல்லூரியின் முதல்வர் முனைவர் நாகதீபா வரவேற்புரை மற்றும் சிறப்புரை ஆற்றினார். அதனைத் தொடர்ந்து திருப்பராய்த்துறை ஸ்ரீ ராமகிருஷ்ண தபோவனத்தின் செயலர் ஸ்ரீமத் சுவாமி சத்தியானந்த மகராஜ்,கல்லூரியின் செயலர் யத்தீஸ்வரி நீலகண்டப்ரியா அம்பா அருளுரை வழங்கினார்கள். மேலும் கல்லூரி மாணவிகளின் பஜனை, நாடகம், சொற்பொழிவும் கோடங்கிப்பட்டி பள்ளி குழந்தைகளின் நாடகமும் நடைப்பெற்றது. விழாவின் நிறைவாக அர்ச்சனை, மஹா தீபா ஆராதனை நடைபெற்று அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.

Tags:    

Similar News