புகழூர் சர்க்கரை ஆலை முன்பு பொதுமக்கள் சாலை மறியல்
- புகழூர் சர்க்கரை ஆலை முன்பு பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்
- கரித்துகள்கள் வெளியேறியதை கண்டித்து
கரூர்:
கரூர் மாவட்டம் புகழூரில் தனியார் சர்க்கரை ஆலை உள்ளது. இதனை சுற்றியுள்ள நால்ரோடு, தோட்டக்குறிச்சி, தளவாபாளையம், செம்படாபாளயைம், கந்தம்பாளயைம், திருக்காடு துறை, வேலாயுதம்பாளையம் ஆகிய பகுதிகளில் ஆயிரக்கணக்கான மக்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் ஆலையில் இருந்து கடந்த 6 மாதங்களாக கரித்தூள் மற்றும் கரும்புச்சக்கை துகள்கள், போன்றவை காற்றின் மூலம் வாகனங்களில் செல்பவர்களின் கண்களில் விழுகிறது.
மேலும், சுற்றியிருக்கும் வீடுகள், விவசாய நிலங்களில் படிந்து வருவதால் குடியிருப்பு வாசிகளும், விவசாயிகளும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். மேலும் ஆலை கழிவு நீர் புகழூர் வாய்க்காலில் கலப்பதால் நோய் அபாயம் உள்ளது. இதுகுறித்து ஆலை நிர்வாகம், மாசுக்கட்டு ப்பாட்டு வாரியத்திடம் முறையிட்டும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் 100க்கும் மேற்பட்டோர் புகழூர் சர்க்கரை ஆலை முன்பு முற்றுகை மற்றும் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவலறிந்த ஆலை மேலாளர் செந்தில்இனியன், டிஎஸ்பி முத்தமிழ்செல்வன், புகழூர் நகராட்சி தலைவர் குணசேகரன், வட்டாட் சியர் மோகன்ராஜ், இன்ஸ்பெக்டர் வினோதினி உள்ளிட்டோர் பேச்சுவார்த்தை நடத்தினர்.
புகையில் வெளியேறும் கரித்தூள், கருமபுச்சக்கை துகள், கழிவுநீர் ஆகியவற்றை முறையாக சீரமைத்து வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளிக்கப்பட்டதை தொடர்ந்து 3 மணி நேர போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.