உள்ளூர் செய்திகள்

கோபிசெட்டிபாளையத்தில் 3 ஆயிரம் கடைகள் அடைப்பு

Published On 2025-01-03 10:33 GMT   |   Update On 2025-01-03 10:33 GMT
  • கோபிசெட்டிபாளையம் பகுதியில் 90 சதவீதம் அதாவது 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன.
  • கடையடைப்பு போராட்டம் காரணமாக கோடிக்கணக்கான வர்த்தகம் முடங்கியது.

நகராட்சியில் டிரேடு லைசென்ஸ் என்ற பெயரில் வருடம் தோறும் ஆயிரம் முதல் 5 ஆயிரம் வரை விதித்துள்ள கட்டணத்தை குறைக்க வேண்டும். கடை மற்றும் வீட்டு வாடகைக்கு 18 சதவீதம் ஜி.எஸ்.டி வரி விதிப்பை மறுபரிசீலனை செய்ய வேண்டும். மின்சார கணக்கெடுப்பை மாதம் ஒருமுறை என்பதை நடைமுறைப்படுத்த வேண்டும் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோபிசெட்டிபாளையம் ஆல் டிரேடர்ஸ் அசோசியேசன் சார்பில் கோபிசெட்டிபாளையம் பகுதியில் இன்று ஒரு நாள் கடை அடைப்பு போராட்டம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

அதன்படி கோபிசெட்டிபாளையம் பகுதியில் 90 சதவீதம் அதாவது 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன. இதனால் கோபிசெட்டிபாளையம் பஸ் நிலையம் வெறிச்சோடி காணப்பட்டது.பஸ் நிலையப் பகுதியில் உள்ள அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டு இருந்தன.


இதே போல் கடைவீதிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட ஓட்டல்கள், மளிகை கடைகள், நகைக் கடைகள், ஜவுளி

க்கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன. கடையடைப்பு போராட்டம் காரணமாக கோடிக்கணக்கான வர்த்தகம் முடங்கியது. இதே போல் கோபிசெட்டிபாளையத்தில் இன்று காலை முதல் மாலை வரை தியேட்டரில் காட்சிகள் ரத்து செய்யப்பட்டிருந்தன.

Tags:    

Similar News