உள்ளூர் செய்திகள்

170 பயணிகளுடன் கோழிக்கோடு விமானம் கோவையில் தரை இறங்கியது

Published On 2023-10-03 14:26 IST   |   Update On 2023-10-03 14:26:00 IST
  • மோசமான வானிலை காரணமாக விமானத்தை தரை இறங்க முடியாத முடியாத சூழ்நிலை ஏற்பட்டது.
  • 5 மணி நேரத்துக்கு பின்னர் 9.20 மணிக்கு விமானம் கோழிக்கோட்டிற்கு புறப்பட்டு சென்றது.

கோவை,

வளைகுடா நாடான ஷார்ஜாவில் இருந்து கேரள மாநிலம் கோழிக்கோட்டிற்கு ஏர் அரேபியா விமானம் இயக்கப்படுகிறது.

இந்த விமானம் நேற்று நள்ளிரவு ஷார்ஜாவில் இருந்து புறப்பட்டது. விமானத்தில் 170 பயணிகள் இருந்தனர். அதிகாலை 3 மணியளவில் விமானம் கோழிக்கோட்டிற்கு வந்தது. அப்போது அங்கு மோசமான வானிலை நிலவியது.

இதன் காரணமாக விமானத்தை தரை இறங்க முடியாத முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. இதனையடுத்து விமானி விமானத்தை கோவை விமான நிலையத்துக்கு திருப்பினார். அதிகாலை 4 மணிக்கு விமானம் கோவை விமான நிலையத்தில் பத்திரமாக தரை இறங்கியது.

பின்னர் விமானத்தை விட்டு இறங்கிய பயணிகள் விமான நிலையத்தில் உள்ள ஒய்வு அறையில் ஒய்வு எடுத்தனர். பின்னர் வானிலை சரியான பின்னர் 5 மணி நேரத்துக்கு பின்னர் 9.20 மணிக்கு விமானம் கோழிக்கோட்டிற்கு புறப்பட்டு சென்றது.

Tags:    

Similar News