உள்ளூர் செய்திகள்

ஆளுநரை கைதுசெய்யும் அதிகாரம் தமிழக போலீசாருக்கு உண்டு - கே.எஸ்.அழகிரி

Published On 2023-08-15 21:37 GMT   |   Update On 2023-08-16 00:22 GMT
  • காங்கிரஸ் அலுவலகமான சென்னை சத்தியமூர்த்தி பவனில் சுதந்திர தின விழா நடந்தது.
  • இதில் அக்கட்சி தலைவர் கே.எஸ்.அழகிரி கொடி ஏற்றி வைத்தார்.

சென்னை:

தமிழக காங்கிரஸ் அலுவலகமான சென்னை சத்தியமூர்த்தி பவனில் நேற்று சுதந்திர தின விழா நடந்தது. இதில் அக்கட்சி தலைவர் கே.எஸ்.அழகிரி கொடி ஏற்றி வைத்தார். அப்போது அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது:

நீட் தேர்வு குறித்து ஆளுநர் வரம்பு மீறி பேசுகிறார். சட்டசபையில் நிறைவேற்றிய மசோதாவை, ஒருமுறைக்கு இருமுறை அனுப்பியும், ஆளுநர் ஒப்புதல் அளிக்க மறுப்பதற்கு அதிகாரம் இல்லை. இது தொடர்பாக வழக்கு தொடர்ந்தால் அவர் கைது செய்யப்படலாம். இதற்கு மாநில அரசுக்கு உரிமை உள்ளது.

மேற்கு வங்காள முதல் மந்திரி மம்தா பானர்ஜி சி.பி.ஐ. அதிகாரியை கைதுசெய்து, போலீஸ் நிலையத்தில் அமர வைத்தாரா இல்லையா?

ஆளுநரின் பேச்சும் செயலும் தவறானது. எங்கள் கூட்டணி கட்சிகள், அவரது தேநீர் விருந்துக்கு வரமாட்டோம் எனக் கூறினோம். அவர் மழையே பெய்யாத போதும், மழை காரணமாக தேநீர் விருந்தை தள்ளி வைத்திருப்பதாக கூறியிருக்கிறார் என தெரிவித்தார்.

Tags:    

Similar News