குத்துவிளக்கு பூஜையில் கலந்து கொண்ட பெண்கள்.
அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் குத்துவிளக்கு பூஜை
- கணபதி ஹோமம், வர லட்சுமி ஹோமம் உள்ளிட்ட பூஜைகள் நடைபெற்றது.
- பெண்களுக்கு மஞ்சள், குங்குமம், வளையல், தாலி கயிறு வழங்கப்பட்டது
தருமபுரி,
தருமபுரி குமாரசாமி பேட்டை அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவி லில் 17-ம் ஆண்டு வரலட்சுமி பூஜை மற்றும் குத்துவிளக்கு பூஜை நடைபெற்றது. இந்த விழாவை முன்னிட்டு மாலை 5 மணிக்கு கணபதி பூஜை, கணபதி ஹோமம், வர லட்சுமி ஹோமம் உள்ளிட்ட பூஜைகள் நடைபெற்றது.
மாலை 6 மணிக்கு பூர்ணா ஹாதி, இரவு 8 மணிக்கு வரலட்சுமி பூஜை, 9 மணிக்கு மேல் 108 குத்துவிளக்கு பூஜையும் நடைபெற்றது. விழாவில் ஏராளமான பெண்கள் குத்துவிளக்கு பூஜையில் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர். இரவு 9.30 மணிக்கு அம்ம னுக்கு மகா தீபாராதனையும், அதைத்தொடர்ந்து குத்து விளக்கு பூஜையில் கலந்து கொண்ட பெண்களுக்கு மஞ்சள், குங்குமம், வளையல், தாலி கயிறு வழங்கப்பட்டது . விழாவிற்கான ஏற்பாடு களை குமாரசாமி பேட்டை கோவில் அறங்காவலர் குழுவினர் மற்றும் மகளிர் அணியினர் ஏற்பாடு செய்திருந்தனர்.