உள்ளூர் செய்திகள்
லட்சார்ச்சனை விழா நடந்தது.
கலிதீர்த்த அய்யனார் கோவிலில் லட்சார்ச்சனை விழா
- பக்தர்கள் கலந்து கொண்டு அர்ச்சனை செய்து சாமி தரிசனம் செய்தனர்.
- தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
வேதாரண்யம்:
வேதாரண்யம் அடுத்த ஆயக்காரன்புலத்தில் உள்ள கலிதீர்த்த அய்யனார் கோவிலில் 21-ம் ஆண்டு லட்சார்ச்சனை விழா நடைபெற்றது.
3 நாட்கள் நடைபெறும் லட்சார்ச்சனை விழாவின் முதல் நாளில் அய்யனாருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்று பின்பு சிவாச்சாரியார்கள் லட்சார்ச்சனை நடத்தினர்.
இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு அர்ச்சனை செய்து சாமி தரிசனம் செய்தனர்.
பின்பு, பக்தர்களுக்கு இலவச பிரசாதப்பை வழங்கப்பட்டது.
தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சி ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.