உள்ளூர் செய்திகள்
விதிமுறைகளை மீறிய வாகனங்களுக்கு அபராதம்
- கனரக வாகனங்கள் வந்து செல்வதால் வாகனஓட்டிகள் மீண்டும் அவதியடைந்தனர்.
- அனுமதிக்கப்பட்ட நேரத்தை மீறி நகரில் வந்து சென்ற வாகனங்களுக்கு அபராதம்.
சீர்காழி:
சீர்காழி நகரில் போக்குவரத்து நெரிசலை தடுக்க பள்ளி நேரங்களான காலை 8மணி முதல் 10 மணிவரையிலும், மாலை 4மணி முதல் 6மணி வரையிலும் கனரக வாகனங்கள் வந்து செல்ல போக்குவரத்து போலீசார் தடை விதித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளனர்.
இந்நிலையில் போலீசாரின் அறிவிப்பை மீறி நகரில் கனரக வாகனங்கள் வந்து செல்வதால் வாகனஓட்டிகள் மீண்டும் அவதியடைந்தனர்.
இது குறித்து தகவல் அறிந்ததும் போக்குவரத்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பிறைசந்திரன் தலைமையில் போலீ சார்வாகனதணிக்கை செய்தனர்.
அப்போது அனுமதிக்கப்பட்ட நேரத்தை மீறி நகரில் வந்து சென்ற கனரக வாகனங்கள் நிறுத்தி அபராதம் விதித்து ஓட்டுனரை எச்சரித்தனர்.