உள்ளூர் செய்திகள்
சங்கராபுரம் அருகே சாராயம் விற்றவர் கைது
- கோழிப்பண்ணை அருகில் சாராயத்தை பதுக்கி வைத்து விற்பனைசெய்தார் .
- போலீசார் அவரை கைது செய்து அவரிடமிருந்து 55 லிட்டர் சாராயத்தை கைப்பற்றினர்..
கள்ளக்குறிச்சி:
சங்கராபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நரசிம்மஜோதி தலைமை யிலான போலீசார் சேஷசமுத்திரம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுப ட்டனர். அப்போது அதே கிராமத்தை சேர்ந்த சின்னதுரை (32) என்பவர் அங்குள்ள ஒரு கோழிப்பண்ணை அருகில் சாராயத்தை பதுக்கி வைத்து விற்பனைசெய்தார் இதைபார்த்த போலீசார் அவரை கைது செய்து அவரிடமிருந்து 55 லிட்டர் சாராயத்தை கைப்பற்றினர்.