உள்ளூர் செய்திகள்

மதுரை-தூத்துக்குடி இடையே 2-வது அகல ரெயில் பாதை பணிகள் விறுவிறுப்பு

Published On 2022-07-13 14:21 IST   |   Update On 2022-07-13 14:21:00 IST
  • மதுரை-தூத்துக்குடி இடையே 2-வது அகல ரெயில் பாதை பணிகள் விறுவிறுப்பு நடந்து வருகிறது.
  • தற்போது வரை இந்த திட்டத்தில் 90 சதவீத பணிகள் முடிவடைந்துவிட்டது.

திருமங்கலம்

நெல்லை, கன்னியாகுமரி, தூத்துக்குடி உள்ளிட்ட தென்மாவட்டங்களுக்கு மதுரையிலிருந்து ஒரேயொரு அகல ரெயில்பாதை மட்டுமே உள்ளது. இதனால் சென்னை, கோவை, உள்ளிட்ட நகரங்கள் மற்றும் வட மாநிலங்களிலிருந்து கூடுதல் ெரயில்கள் இயக்கு வதில் சிரமங்கள் இருந்து வருகின்றன.

இதுதொடர்பாக தென்மாவட்ட மக்களின் நீண்டநாள் கோரிக்கையை தொடர்ந்து மத்திய அரசு கடந்த 2012 - 13ம் ஆண்டு இரட்டை வழித்தடத்திற்கு அனுமதியளித்தது.

இதைத்தொடர்ந்து பொறியியல் குழுவினர் ஆய்வு நடத்திய பின்பு கடந்த 2015 –-16 பட்ஜெட்டில் நிதிஒதுக்கீடு செய்யப்பட்டு மதுரை- வாஞ்சி மணியாச்சி- தூத்துக்கு டிக்கு 160 கி.மீ.க்கும், மற்றும் வாஞ்சி மணி யாட்சி- நெல்லை-நாகர்கோவில் வரையில் 102 கி.மீ தூரத்திற்கும் ஒரு திட்டமாக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் தொடங்கி கடந்த 5 ஆண்டு களாக நடைபெற்றது வரு கிறது.

இதில் மதுரையிலிருந்து தூத்துக்குடி மீளவட்டான் வரையிலும், நாகர்கோவில் வரையிலும் 2 பிரிவுகளாக பாதை அமைக்கப்பட்டு வருகிறது. இந்தஇரண்டாவது அகல ெரயில்பாதை தூத்துக்குடி அருகேயுள்ள மீளவிட்டானிலிருந்து திருமங்கலம் வரை தற்போது நிறைவடைந்துள்ளது. எஞ்சியுள்ள திருமங்கலம்- மதுரை வரை யிலான அகல ெரயில்பாதை பணி கள் மட்டுமே உள்ளன. இந்த பணிகள் நிறைவடைந்தால் மதுரையிலி ருந்து தூத்துக்குடி வரையில் 2-வது இரட்டை அகல ெரயில் பாதை பயன்பாட்டிற்கு வரும்.

இந்த நிலையில் திருமங்கலம் கரிசல்பட்டி யிலிருந்து மதுரை வரையில் தற்போது 2-வது அகல ரெயில்பாதை பணிகள் தொடங்கியுள்ளன. திருமங்கலத்தில் தொடங்கி மதுரை சந்திப்பு வரையில் இரட்டை அகல ரெயில் பாதை அமைக்க ப்பட்டு வருகிறது. தற்போது திருமங்கலம் ெரயில் நிலை யத்திலிருந்து மறவன்குளம் ரெயில்வே கேட் வரையில் தண்ட வாளம் அமைக்கும் பணியும், அதில் ஸ்லீப்பர் கட்டைகள் அடுக்கிவைக்கும் பணிகளும் நடைபெற்று வருகிறது.

ஸ்லீப்பர் லேயிங் மிஷின் மூலமாக ஸ்லீப்பர் கட்டைகள் தண்டவாள பகுதிகளுக்கு எடுத்து செல்லப்பட்டு பொரு த்தப்பட்டு வருகின்றனர். தற்போது வரை இந்த திட்டத்தில் 90 சதவீத பணிகள் முடிவடைந்துவிட்டது. மீதமுள்ள பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்த பணிகள் முடிவ டைந்த பின்பு அதிகாரிகள் ஆய்வு நடத்திய பின்பு மதுரை யிலிருந்து தூத்துக்குடி வரை அமைக்கப்பட்டுள்ள 2-வது இரட்டை அகல ரெயில்பாதை பொது மக்களின் பயன்பாட்டிற்கு வரும். இதே போல் வாஞ்சி மணியாச்சி, நெல்லை, நாகர்கோவில் பகுதிகளில் நடைபெறும் பணிகள் முடிவ டைந்த பின்பு மதுரை யிலிருந்து தூத்துக்குடி மற்றும் நெல்லை, கன்னி யாகுமரி, கேரள மாநில மான திருவனந்தபுரத்திற்கு கூடுதல் ரெயில்கள் இயக்க ப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags:    

Similar News