உள்ளூர் செய்திகள்

புதிய செயலிகளை உருவாக்கிய ஊழியர்களை தெற்கு ரெயில்வே பொது மேலாளர் பி.ஜி. மல்லையா பாராட்டியபோது எடுத்த படம்.

5 செயலிகள்: ஊழியர்களுக்கு பாராட்டு

Published On 2022-06-23 10:05 GMT   |   Update On 2022-06-23 10:05 GMT
  • ரெயில் பயணிகள் வசதிக்கு 5 செயலிகளை உருவாக்கிய ஊழியர்களுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • “ரெயில் தண்டோரா, ரெயிலில் பயணிகளின் எண்ணிக்கையை கணக்கெடுக்க “ரெயில் சென்சஸ்” உள்பட 5 செயலிகளை உருவாக்கி உள்ளனர்.

மதுரை

மதுரை ரெயில்வே கோட்ட ஊழியர்களான அணில் சவுத்ரி, அபிநயா, சரவணன், நித்யராஜ், சுந்தர் ஆகியோர் கையடக்க முன்பதிவில்லாத பயணச்சீட்டு வழங்கும் எந்திரம், புறநகர் ரெயில் கால அட்டவணை மற்றும் ரெயில் நிலையங்களில் உள்ள வசதிகள் பற்றி அறிந்து கொள்ள "ரெயில் பார்ட்னர்", தெற்கு ரெயில்வே வர்த்தகத் துறை அறிவிப்புகளை அறிந்துகொள்ள "ரெயில் தண்டோரா, ரெயிலில் பயணிகளின் எண்ணிக்கையை கணக்கெடுக்க "ரெயில் சென்சஸ்" உள்பட 5 செயலிகளை உருவாக்கி உள்ளனர்.

அவர்களை நேரில் அழைத்து கவுரவப்படுத்திய தெற்கு ரெயில்வே பொது மேலாளர் பி.ஜி. மல்லையா, புதிய கண்டுபிடிப்புகளை ஊக்குவித்த தலைமை முதன்மை வர்த்தக மேலாளர் ரவி வல்லூரி, தலைமை முதன்மை ரெயில் இயக்க மேலாளர் நீனு இட்டியரா, முதன்மை வர்த்தக மேலாளர் நிதின் பன்சால், முதன்மை ரெயில் இயக்க மேலாளர் வினயன் ஆகியோருக்கும் பாராட்டு தெரிவித்தார்.

சென்னை புறநகர் ரெயில் நிலையங்களில் கையடக்க முன்பதிவில்லாத பயணச்சீட்டு வழங்கும் எந்திரம் சோதனை செய்யப்பட்டு வருகிறது. இது விரைவில் மதுரை உள்பட பல்வேறு ரெயில் நிலையங்களில் பயன்பாட்டுக்கு வர உள்ளது.

மேற்கண்ட தகவலை மதுரை கோட்ட ரெயில்வே செய்தி தொடர்பு அலுவலகம் தெரிவித்து உள்ளது.

Tags:    

Similar News