உள்ளூர் செய்திகள்
விடுமுறையில் வந்த ராணுவ வீரர் உயிரிழப்பு
- திருமங்கலம் அருகே விடுமுறையில் வந்த ராணுவவீரர் உயிரிழந்தார்.
- வீட்டில் இருந்தபோது அவருக்கு திடீரென்று நெஞ்சுவலி ஏற்பட்டது.
திருமங்கலம்
மதுரை மாவட்டம் கப்பலூர் பொம்மையாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் வடிவேல்(42). அரியானா மாநிலத்தில் ராணுவத்தில் பணிபுரிந்தார். 5 தினங்களுக்கு முன்பு வடிவேல் விடுமுறையில் வீட்டுக்கு வந்தார்.
நேற்று வீட்டில் இருந்தபோது அவருக்கு திடீரென்று நெஞ்சுவலி ஏற்பட்டது. பின்பு மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். வடிவேல் உடல் பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதுகுறித்து மனைவி பாக்கியலட்சுமி கொடுத்த புகாரின் பேரில் ஆஸ்டின்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.