மணிப்பூர் சம்பவத்தை கண்டித்து காங்கிரசார் ஆர்ப்பாட்டம்
- மணிப்பூர் சம்பவத்தை கண்டித்து காங்கிரசார் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
- 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு மெழுகுவர்த்தி ஏந்தி கண்டன கோஷங்கள் எழுப்பினர்.
திருமங்கலம்
மதுரை மாவட்டம் திருமங்கலம் ராஜாஜி சிலை முன்பு மதுரை தெற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் மணிப்பூர் சம்பவத்தில் நடவடிக்கை எடுக்காததற்கு கண்டனம் தெரிவித்து காங்கிரஸ் கட்சியினர் கையில் மெழுகுவர்த்தி ஏந்தி மத்திய அரசுக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மதுரை தெற்கு மாவட்ட தலைவர் அம்மாபட்டி பாண்டியன் தலைமை வகித்தார். முன்னாள் மாவட்ட தலைவர்கள் ஜெயராமன், பிரபாகரன் முன்னிலை வகித்தனர்.
அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் இளங்கோவன், மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் காமாட்சி, சரவணகுமார், பழனிகுமார், ராஜ்குமார், மகேந்திரன், நகர தலைவர் கரிசல்பட்டி சவுந்தரபாண்டி, வட்டாரத் தலைவர் முருகேசன், மாவட்ட மகளிர் அணி தலைவி பிரவீனா உள்பட பலர் கலந்து கொண்டனர். உசிலம்பட்டி, எழுமலை, கல்லுப்பட்டி, பேரையூர் ஆகிய பகுதிகளை சேர்ந்த காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் என 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு மெழுகுவர்த்தி ஏந்தி கண்டன கோஷங்கள் எழுப்பினர்.