உள்ளூர் செய்திகள்
வருசநாடு ஆதிபராசக்தி கோவிலில் மகாவேள்வி யாகம்
- கிராம தேவதை வழிபாடு, நாகசக்தி அம்மன், அன்னை ஆதிபராசக்தி உருவ பிரதிஷ்டை வழிபாடு, கலச விளக்கு, மகா வேள்வி, விளக்கு பூஜைகள் நடைபெற்றது.
- விழாவின் ஒரு பகுதியாக மாலை அக்னி சட்டி, முளைப்பாரி மற்றும் கஞ்சி கலய ஊர்வலம் நடைபெற்றது. விழாவில் கலந்துகொண்டு பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
வருசநாடு:
வருசநாடு மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோவிலில் கலச மகாவேள்வி யாகப் பெருவிழா நடைபெற்றது. இதையடுத்து நேற்று மதியம் முதல்கால சுற்று பூஜை நடைபெற்றது.
அதைத்தொடர்ந்து கிராம தேவதை வழிபாடு, நாகசக்தி அம்மன், அன்னை ஆதிபராசக்தி உருவ பிரதிஷ்டை வழிபாடு, கலச விளக்கு, மகா வேள்வி, விளக்கு பூஜைகள் நடைபெற்றது. இதில் கடமலை-மயிலை ஒன்றியத்தை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
விழாவின் ஒரு பகுதியாக மாலை அக்னி சட்டி, முளைப்பாரி மற்றும் கஞ்சி கலய ஊர்வலம் நடைபெற்றது. விழாவில் கலந்துகொண்டு பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவிற்கான ஏற்பாடுகளை மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி இளைஞர் வழிபாட்டு மன்றத்தினர் செய்திருந்தனர்.