உள்ளூர் செய்திகள்
சங்கராபுரத்தில் பொதுமக்களை அரிவாளை காட்டி மிரட்டியவர் கைது
சங்கராபுரத்தில் பொதுமக்களை அரிவாளை காட்டி மிரட்டியவர் கைது செய்யப்பட்டார்.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் பொய்க்குணம் சாலையில் லோகநாதன் (வயது 34) என்பவர் வசித்து வருகிறார். இவர் சங்கராபுரம் வள்ளலார் மன்றம் அருகில் கையில் வீச்சரிவாளுடன் சுற்றி வந்தார். மேலும் அங்கு வந்த பொதுமக்களை திட்டி, கொலை மிரட்டல் விடுத்தார். இது பற்றி தகவல் அறிந்த சங்கராபுரம் போலீசார் விரைந்து சென்று லோகநாதனை பிடிக்க முயன்றனர். அப்போது லோகநாதன், தான் வைத்திருந்த வீச்சரிவாளை காண்பித்து, என்னை பிடித்தால் வெட்டி கொலை செய்து விடுவேன் என்று போலீசாரையும் மிரட்டினார். இருப்பி னும் போலீசார் லோகநாதனை சுற்றிவளைத்து பிடித்து அவரிடம் இருந்த வீச்சரிவாளை பறிமுதல் செய்தனர். மேலும் வழக்கு பதிவு செய்து லோகநாதனை கைது செய்தார்.