உள்ளூர் செய்திகள்

முல்லைபெரியாறு அணை (கோப்பு படம்)

138 அடியை நெருங்கும் முல்லைபெரியாறு அணை நீர்மட்டம்

Published On 2022-11-16 09:27 IST   |   Update On 2022-11-16 09:27:00 IST
  • கேரளாவில் பெய்த தொடர் மழையால் முல்லைபெரியாறு அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது.
  • இன்று காலை நிலவரப்படி 137.60 அடியாக உள்ள நிலையில் மாலைக்குள் 138 அடியை எட்டிவிடும் என எதிர்பார்க்கப் படுகிறது.

கூடலூர்:

கேரளாவில் பெய்த தொடர் மழையால் முல்லைபெரியாறு அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. இதனால் அணையின் நீர்மட்டமும் சீராக உயர்ந்து வருகிறது. இன்று காலை நிலவரப்படி 137.60 அடியாக உள்ளது. மாலைக்குள் 138 அடியை எட்டிவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. 152 அடி உயரம் கொண்ட அணையில் உச்சநீதிமன்ற தீர்ப்புபடி 142 அடி வரை தண்ணீர் தேக்கப்படுகிறது.

கடந்த 3 ஆண்டுகளாக பருவமழை கைகொடுத்து வருவதால் அணையின் நீர்மட்டம் உயர்ந்தே காணப்படுகிறது. இதனால் கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் இருபோக நெல்சாகுபடி நடைபெற்று வருகிறது. அணைக்கு 965 கனஅடிநீர் வருகிறது. 511 கனஅடிநீர் திறக்கப்படுகிறது.

வைகை அணையின் நீர்மட்டம் 70.01 அடியில் நீடித்து வருகிறது. தொடர் மழையால் நீர்வரத்து 1899 கனஅடியாக உள்ளது. அணையிலிருந்து மதுைரமாநகர குடிநீர் மற்றும் பாசனத்திற்காக 1866 கனஅடிநீர் திறக்கப்படுகிறது.

மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 55 அடியாக உள்ளது. 178 கனஅடிநீர் வருகிறது. 40 கனஅடிநீர் பாசனத்திற்கும், 138 கனஅடிநீர் உபரியாகவும் திறக்கப்படுகிறது.

சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 126.51 அடியாக உள்ளது. 127 கனஅடிநீர் வருகிறது. 30 கனஅடிநீர் பாசனத்திற்கும், 97 கனஅடிநீர் உபரியாகவும் திறக்கப்படுகிறது.

தேக்கடி 0.4, மஞ்சளாறு 3, சோத்துப்பாறை 2, போடி 2.4 மி.மீ மழையளவு பதிவாகி உள்ளது.

Tags:    

Similar News