உள்ளூர் செய்திகள்

கோப்பு படம்

128 அடியாக குறைந்த முல்லைபெரியாறு அணை நீர்மட்டம்

Published On 2022-10-07 10:25 IST   |   Update On 2022-10-07 10:25:00 IST
  • கேரளாவில் மழை இல்லாததால் முல்லைபெரியாறு அணைக்கு நீர்வரத்து 258 கனஅடியாக குறைந்துள்ளது. அணையின் நீர்மட்டமும் 128.65 அடியாக குறைந்துள்ளது.
  • வைகைஅணையின் நீர்மட்டம் 67.67 அடியாக உள்ளது.

கூடலூர்:

மழை ஓய்ந்த நிலையில் அணைகளுக்கு நீர்வரத்து குறைந்துள்ளது. வடகிழக்கு பருவமழை விரைவில் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தேனி மாவட்டத்தில் உள்ள அணைகளை பொதுப்பணித்துறையினர் கண்காணித்து வருகின்றனர்.

மேலும் பருவமழை காலத்தின்போது எடுக்கப்பட வேண்டிய முன்னேற்பாடுகள் குறித்தும் ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர்.

கேரளாவில் மழை இல்லாததால் முல்லைபெரியாறு அணைக்கு நீர்வரத்து 258 கனஅடியாக குறைந்துள்ளது. அணையிலிருந்து தமிழக பகுதிக்கு 1378 கனஅடிநீர் திறக்கப்படுகிறது. மேலும் அணையின் நீர்மட்டமும் 128.65 அடியாக குறைந்துள்ளது.

வைகைஅணையின் நீர்மட்டம் 67.67 அடியாக உள்ளது. 468 கனஅடிநீர் வருகிறது. 1289 கனஅடிநீர் திறக்கப்படுகிறது. மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 55 அடி, வரத்தும், திறப்பும் இல்லை. சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 119.55அடியாக உள்ளது. வரத்து இல்லாத நிலையில் 3 கனஅடிநீர் திறக்கப்படுகிறது.

கூடலூர் 17-வது வார்டு கல்லக்கரை ஓடைப்பகுதியை சேர்ந்தவர் சிவா(32). இவர் காஞ்சிமரத்துறை முல்லைபெரியாற்றில் குளிக்கச்சென்றார். அப்போது ஆழமான பகுதிக்கு சென்றதால் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டார். அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் சிவாவை காப்பாற்ற முயன்றனர்.

ஆனால் முடியவில்லை. இதனைதொடர்ந்து லோயர்கேம்ப் போலீசார் மற்றும் தீயணைப்புத்துறையினர் விரைந்து வந்து சிவாவை தேடும் பணியில் ஈடுபட்டனர்.

இரவு வெகுநேரமானதால் தேடும் பணி நிறுத்தப்பட்டது. இன்று 2-வது நாளாக அவரை தேடும் பணியில் தீயணைப்புத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

Tags:    

Similar News