கூடுதல் தண்ணீர் திறப்பால் 123 அடியாக சரிந்த முல்லைபெரியாறு அணை நீர்மட்டம்
- 91 கனஅடிநீர் மட்டுமே வருவதால் அணையின் நீர்மட்டம் வேகமாக சரிந்து வருகிறது.
- வைகை அணையின் நீர்மட்டம் 55.12 அடியாக உள்ளது.
கூடலூர்:
தேனி மாவட்டம் கூடலூர் அருகே கேரள எல்லைப்பகுதியில் அமைந்துள்ள முல்லைபெரியாறு அணை மூலம் தமிழகத்தில் 5 மாவட்ட விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. 152 அடி உயரம் கொண்ட அணையில் உச்சநீதிமன்ற அறிவுறுத்தலின்படி 142 அடிவரை தண்ணீர் தேக்கப்பட்டு வருகிறது.
தற்போது மழை முற்றிலும் ஓய்ந்த நிலையில் தமிழக பகுதிக்கு 678 கனஅடிநீர் திறக்கப்பட்டு வருகிறது. ஆனால் 91 கனஅடிநீர் மட்டுமே வருவதால் அணையின் நீர்மட்டம் வேகமாக சரிந்து வருகிறது. இன்று காலை நிலவரப்படி 123.30 அடியாக உள்ளது.
வைகை அணையின் நீர்மட்டம் 55.12 அடியாக உள்ளது. 432 கனஅடிநீர் வருகிறது. அணையிலிருந்து மதுரை மாநகர குடிநீர் மற்றும் பாசனத்திற்காக 769 கனஅடிநீர் திறக்கப்படுகிறது.
மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 45.95 அடியாக உள்ளது. 37 கனஅடிநீர் வருகிறது. 75 கனஅடிநீர் திறக்கப்படுகிறது. சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 72.43 அடியாக உள்ளது. வரத்து இல்லாத நிலையில் 25 கனஅடிநீர் திறக்கப்படுகிறது. மழை எங்கும் இல்லை.