லாரி மீது மோட்டார்சைக்கிள் மோதி டாஸ்மாக் ஊழியர் பரிதாப சாவு
- மோகனூர் சர்க்கரை ஆலை வண்டிக்கேட் பகுதியில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் கடையில் விற்பனையாளராக கடந்த 4 வருடமாக வேலை பார்த்து வந்தார்.
- மோகனூர் -பரமத்தி வேலூர் சாலையில் உள்ள வண்டிகேட் பகுதியில் சாலை ஓரமாக மின் விளக்கும் எரியாமல் இருளில் நின்று கொண்டிருந்த லாரி மீது பாலசுப்ரமணி ஓட்டிச் சென்ற மோட்டார்சைக்கிள் மோதியது.
பரமத்திவேலூர்:
நாமக்கல் மாவட்டம் மோகனூர் அடுப்புத்தெரு பகுதியை சேர்ந்தவர் பால சுப்பிரமணி (வயது 39). இவர் மோகனூர் சர்க்கரை ஆலை வண்டிக்கேட் பகுதியில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் கடையில் விற்பனையாளராக கடந்த 4 வருடமாக வேலை பார்த்து வந்தார்.
இந்த நிலையில் சம்பவத்தன்று டாஸ்மாக் கடைக்கு வேலைக்கு சென்று வருவதாக தனது மனைவி சக்தியிடம் கூறிவிட்டு சென்றுள்ளார். வேலை முடிந்து இரவு 11.30 மணி அளவில் பாலசுப்பிரமணி மற்றும் டாஸ்மாக் கடையின் மேற்பார்வையாளர் சக்திவேல், மற்றொரு விற்பனையாளர் ராமசாமி ஆகியோர் தனித்த னியாக ேமாட்டார்சைக்கிளில் வந்து கொண்டிருந்தனர்.
அப்போது மோகனூர் -பரமத்தி வேலூர் சாலையில் உள்ள வண்டிகேட் பகுதியில் சாலை ஓரமாக மின் விளக்கும் எரியாமல் இருளில் நின்று கொண்டிருந்த லாரி மீது பாலசுப்ரமணி ஓட்டிச் சென்ற மோட்டார்சைக்கிள் மோதியது. இதில் அவருக்கு தலை மற்றும் பல்வேறு பகுதியில் பலத்த காயங்கள் ஏற்பட்டது.
அவரை நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இருப்பினும் சிகிச்சை பலனின்றி பாலசுப்பிரமணி உயிரிழந்தார்.
இது குறித்து மோகனூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் தங்கவேல் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்.