உள்ளூர் செய்திகள்

உழவன் செயலியை பதிவிறக்கம் செய்து பயன்பெற அழைப்பு

Published On 2023-06-08 12:51 IST   |   Update On 2023-06-08 12:51:00 IST
  • விவசாயிகள் எளிதாக அறிந்து கொள்ளும் வகையில், உழவன் செயலி அறிமுகப்ப டுத்தப்பட்டு உள்ளது.
  • உழவன் செயலியை ஆன்ட்ராய்டு மொபைல் போனில், பிளே ஸ்டோர் வழியாக டவுன்லோடு செய்து கொள்ளலாம்.

நாமக்கல்:

நாமக்கல் மாவட்ட வேளாண் இணை இயக்கு னர் துரைசாமி வெளி யிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-

தமிழ்நாடு அரசின், வேளாண் மற்றும் உழவர் நலத்துறை, தோட்டக்கலை, வேளாண் வணிகம் மற்றும் வேளாண் பொறி யியல் துறைகள் மூலம் செயல்ப டுத்தப்படும் திட்டங்கள் குறித்த விபரங்களை, விவ சாயிகள் எளிதாக அறிந்து கொள்ளும் வகையில், உழவன் செயலி அறிமுகப்ப டுத்தப்பட்டு உள்ளது.

உழவன் செயலியை ஆன்ட்ராய்டு மொபைல் போனில், பிளே ஸ்டோர் வழியாக டவுன்லோடு செய்து கொள்ளலாம். டவுன் லோடு செய்தபின் செயலியில், தங்களது அடிப்படை தகவல்களான பெயர், முகவரி, மொபைல் எண் மற்றும் ஆதார் விபரங்களை பதிவு செய்து, உழவன் செயலியை பயன்படுத்தலாம்.

உழவர் அலுவலர் தொடர்பு திட்டம் மற்றும் மான்ய திட்டங்கள், வேளாண் வளர்ச்சித் திட்டம், இடுபொருள் முன்பதிவு, பயிர் காப்பீடு விபரம், உரங்கள் மற்றும் விதை இருப்பு நிலை, சந்தை விலை நிலவரம், வானிலை அறிவுரைகள், பயிர் சாகுபடி வழிகாட்டி உள்பட, 23 வகையான பயன்பாடுகளை இந்த செயலி மூலம் அறிந்து கொள்ளலாம். இந்த செல்போன் செயலியை விவசாயிகள் பயன்ப டுத்திக்கொள்ள வேண்டும்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Tags:    

Similar News