நத்தம் மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா முகூர்த்தக்கால் நடுதலுடன் தொடங்கியது
- நத்தம் மாரியம்மன்கோவிலில் இந்துசமய அறநிலையத்துறை சார்பில் கும்பாபிஷேக விழா நடத்த தமிழக அரசு முடிவு செய்தது.
- மேளதாள இசைகள் முழங்க வர்ணம் பூசப்பட்டு மாவிலைகள் இணைக்கப்பட்ட முகூர்த்தக்கால் நடும் விழா நடந்தது.
நத்தம்:
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் மாரியம்மன் கோவில் மிகவும் பிரசித்தி பெற்ற 400 ஆண்டுகள் பழமை வாய்ந்த கோவிலாகும். இக்கோவிலில் இந்துசமய அறநிலையத்துறை சார்பில் கும்பாபிஷேக விழா நடத்த தமிழக அரசு முடிவு செய்தது.
அதன்படி கடந்த ஜூன் மாதம் 27-ம் தேதி பாலாலய பூஜைகள் நடந்தது. இதை தொடர்ந்து கோவிலில் கோபுர உச்சியில் உள்ள சிலைகள், உள்பிரகாரங்கள் வர்ணம் பூசும், மராமத்து பணிகளும் முழு வீச்சில் நடந்து வருகிறது.
இக்கோவிலில் வருகிற செப்டம்பர் மாதம் 7-ம் தேதி கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டது. கோவில் முன்புள்ள பகுதியில் சிவாச்சாரியார்களின் வேதமந்திரங்கள், மேளதாள இசைகள் முழங்க வர்ணம் பூசப்பட்டு மாவிலைகள் இணைக்கப்பட்ட முகூர்த்தக்கால் நடும் விழா நடந்தது.
இதில் நத்தம் ஒன்றிய குழு தலைவர் கண்ணன், சாணார்பட்டி தெற்கு மாவட்ட கவுன்சிலர் விஜயன், நத்தம் பேரூராட்சி தலைவர் சேக்சிக்கந்தர் பாட்சா, கோவில் செயல் அலுவலர் வாணிமகேஸ்வரி, தாசில்தார் சுகந்தி, யூனியன் ஆணையாளர் முனியாண்டி, பேரூராட்சி செயல் அலுவலர் சரவணக்குமார், தி.மு.க. தெற்கு ஒன்றிய செயலாளர் ரத்தினக்குமார், நகர செயலாளர் ராஜ்மோகன், அ.தி.மு.க. தெற்கு ஒன்றிய செயலாளர் மணிகண்டன்,
நகர செயலாளர் சிவலிங்கம், மாவட்ட ஜெயலலிதா பேரவை இணை செயலாளர் ஜெயபாலன், பேரூராட்சி துணை தலைவர் மகேஸ்வரி சரவணன், முன்னாள் துணை தலைவர் சேக்ஒலி மற்றும் அறநிலையத்துறை அதிகாரிகள், திருக்கோவில் பூசாரிகள், அரசியல் கட்சி பிரமுகர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.