செங்கோட்டையில் நவராத்திரி கொலு விழா கோலாகலம்
- செங்கோட்டை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதி கோவில்களில் ஆண்டுதோறும் நவராத்திரி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
- அறம் வளர்த்த நாயகி சமேத குலசேகர நாத சுவாமி கோவில், ஓம் சக்திகோவில் உட்பட ஏராளமான கோவில்களில் நவராத்திரி விழா நடைபெறுகிறது.
செங்கோட்டை:
செங்கோட்டை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதி கோவில்களில் ஆண்டுதோறும் நவராத்திரி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அங்கு கடந்த 26-ந்தேதி தொடங்கிய விழா தொடர்ந்து 9 நாட்கள் நடந்து வருகிறது.
செங்கோட்டை அறம் வளர்த்த நாயகி சமேத குலசேகர நாத சுவாமி கோவில், ஓம் சக்திகோவில் உட்பட ஏராளமான கோவில்களில் நவராத்திரி விழா நடைபெறுகிறது.பெரும்பாலான வீடுகளில் கிருஷ்ணன் லீலைகள், விநாயகர் திருவிளையாடல், வள்ளி, தெய்வானை, முருகன் திருவுருவ காட்சிகள், முளைப்பாரி செட், பொங்கல் செட், ஐஸ்வரேஸ்வரர் செட், கல்யாண செட், அழகர் செட் உள்ளிட்ட பொம்மைகள் இடம் பெற்றிருந்தன.
நவராத்திரி சிறப்பு பற்றி செங்கோட்டையை சேர்ந்த வனராணி கூறுகையில், புரட்டாசி அமாவாசைக்கு அடுத்த நாள் முதல் இந்த பூஜை தொடங்கி 9 நாட்களுக்கு நடைபெறுகிறது. அமாவாசை அன்று கலசத்திற்கு சந்தனம், குங்குமம் வைத்து அதில் அரிசி நிரப்பி மாவிலை வைத்து அதன் நடுவில் தேங்காய் வைத்து தேவியை மனதில் தியானித்து கொலு தட்டில் வைத்து பூஜித்தால் செல்வம் பெருகும் என்றார்.