உள்ளூர் செய்திகள்
சீர்காழி சட்டைநாதர் கோவிலில் நவராத்திரி இசைவிழா
- இசை பள்ளி மாணவர்கள் 30-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.
- குழந்தைகள் அனைவருக்கும் பரிசு பொருட்கள் வழங்கப்பட்டன.
சீர்காழி:
மயிலாடுதுறை மாவ ட்டம் சீர்காழியில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான சட்டைநாதர் கோவில்அமைந்துள்ளது.
திருஞான சம்பந்தர் தேவாரத்தில் முதல் பதிகமான தோடுடைய சிவனே என்ற பதிகத்தை பாடி அருளிய தலமான இங்கு நவராத்திரி இசை விழா ஆண்டுதோறும் திருஞானசம்பந்தர் இசை பள்ளி சார்பில் நடைபெற்று வருகிறது.
அதுபோல இவ்வாண்டு நவராத்திரி இசை விழா நடைபெற்றது.
இசை பள்ளி மாணவர்கள் 30க்கும் மேற்பட்டோர்கலந்து கொண்டு தேவார பதிகங்கள், விநாயகர் துதி, சரஸ்வதி பாடல் உள்ளிட்ட பக்தி பாடல்களையும் பாரதியார் பாடல்களையும் பாடினர்.
இதில் குறிப்பாக 4 வயது முதல் மழலைச் சொல் மாறாத சிறுவர் சிறுமியர் இசை விழாவில் கலந்து கொண்டு இசைக்கு ஏற்ப பாடியது பார்வையாளர்களை பரவசப்படுத்தியது.
இவ்விழாவில் பாடிய குழந்தைகள் அனைவருக்கும் பரிசு பொருட்கள் வழங்கப்பட்டன.