உள்ளூர் செய்திகள்

வானூர் அருகே மினிவேனை திருடிய கொள்ளையர்கள் கைது

Published On 2022-11-21 07:26 GMT   |   Update On 2022-11-21 07:26 GMT
  • வீட்டின் முன்னால் நிறுத்தியிருந்த மினி வேனை காணவில்லை.
  • கோட்டக்குப்பம் பகுதியில் காணாமல் போன மினி வேன் நெய்வேலியில் உள்ளதாக போலீசாருக்கு தகவல் வந்தது.

விழுப்புரம்:

விழுப்புரம் மாவட்டம் வானூர் அருகேயுள்ள கோட்டக்குப்பம் பகுதி சின்னமு தலியா ர்சாவடியைச் சேர்ந்தவர் வினோத்(28). இவர் சொந்தமாக மினிவேன் வைத்துள்ளார். கடந்த 12ந் தேதி இரவு தனது வீட்டிற்கு வெளியே வாகனத்தை நிறுத்திவிட்டு உறங்கச் சென்றுவிட்டார். காலையில் எழுந்து வெளியில் வந்து பார்க்கும் போது வீட்டின் முன்னால் நிறுத்தியிருந்த மினி வேனை காணவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த வினோத் அக்கம் பக்கம் உள்ளவ ர்களிடம் விசாரித்தார்.

இதனைத் தொடர்ந்து கோட்டக்கு ப்பம் காவல் நிலையத்தில் வினோத் புகார் அளித்தார். இதுகுறித்து கோட்டக்குப்பம் இன்ஸ்பெக்டர் ராபின்சன் வழக்குபதிவு செய்து பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வந்தனர். இந்நி லையில் கோட்டக்குப்பம் பகுதியில் காணாமல் போன மினி வேன் நெய்வேலியில் உள்ளதாக போலீசாருக்கு தகவல் வந்தது. உடனடியாக நெய்வேலி காவல்துறையினரின் உதவியுடன் கோட்டக்குப்பம் போலீசார் மினிவேனை கண்டுபிடித்தனர்.

தொடர்ந்து போலீசார் மேற்கொண்ட விசா ரணையில் கடலூர் பகுதியைச் சேர்ந்த ஐயப்பன்(24), குறிஞ்சி ப்பாடியைச் சேர்ந்த மருதுபா ண்டி(22) ஆகியோர் மினி வேனை திருடிச் சென்றது போலீசாருக்கு தெரிய வந்தது.இவ்விருவரையும் கைது செய்த போலீசார் அவர்களிடமிருந்த மினி வேனை மீட்டு சின்ன முதலியார்சாவடி வினோத்தி டம் ஒப்படைத்தனர். மேலும் மினி வேனை திருடிய இருவரையும் வானூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி விழுப்புரம் சிறையில் அடைத்தனர்.

Tags:    

Similar News