ஏர்ரபையனஹள்ளி ஊராட்சியில், திட்ட பணிகளை தருமபுரி எம்.எல்.ஏ எஸ்.பி வெங்கடேஸ்வரன் அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைத்த காட்சி.
ரூ.72 லட்சம் மதிப்பிலான புதிய திட்ட பணிகள்
- சிமெண்ட் சாலை அமைப்பதற்காக ரூ.6.50 லட்சம் என ஒட்டுமொத்தமாக ரூ.72,27,000 லட்சம் திட்டப்பணிகள்.
- அனைத்து பணிகளையும் தருமபுரி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பி வெங்கடேஸ்வரன் அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.
தொப்பூர்,
தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி ஒன்றியம், ஏர்ரபையனஹள்ளி ஊராட்சியில் அப்பகுதி பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையான அடிப்படை வசதிகள் கழிவுநீர் கால்வாய் குடிநீர் மற்றும் சாலை சமுதாயக்கூடம் உள்ளிட்ட திட்டங்களுக்கு சட்டமன்ற உறுப்பினர் நிதி மாவட்ட ஊராட்சி குழு நிதி மற்றும் ஊராட்சி நிதியிலிருந்து நிதிகள் ஒதுக்கப்பட்டு அதற்கான பணிகள் தொடங்கப்படுகின்றன அவற்றினை தருமபுரி சட்டமன்ற உறுப்பினர் எஸ் பி வெங்கடேஸ்வரன் அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைத்தார்.
தருமபுரி சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.5 லட்சம் மதிப்பீட்டில் ஈச்சம்பள்ளம் கிராமத்தில் பல்னோக்கு சமுதாய கூடம், நெக்குந்தி கிராமத்தில் கழிவுநீர் கால்வாய் அமைப்பதற்காக ஊராட்சி நிதியிலிருந்து ரூ.15 லட்சம் மதிப்பீட்டிலும் மாவட்ட ஊராட்சி குழு நிதியிலிருந்து ஒன்பது லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கழிவுநீர் கால்வாய், நெக்குந்தி கிராமத்தில் ரூ.13.57 லட்சம் மதிப்பீட்டில் அங்கன்வாடி மையம் கட்டுதல், ரூ. 6.70 லட்சம் மதிப்பீட்டில் கருபையனஹள்ளி கிராமத்தில் அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் சிமெண்ட் சாலை அமைத்தல், அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் மூலம் ஏரியை சீரமைத்து கரையை பலப்படுத்துதல் சுமார் ரூ.8.20 லட்சம் மதிப்பீட்டில் நடைபெற உள்ளது. கெட்டுஅல்லி கிராமத்தில் ஊராட்சி பொது நிதியிலிருந்து 5 லட்சம் மதிப்பீட்டில் கழிவுநீர் கால்வாய் அமைத்தல், தாசன் கோட்டை கிராமத்தில் தனி நபர்களுக்கு குடிநீர் வழங்கல் திட்டத்திற்காக ரூ.2.50 லட்சம் ஒதுக்கீடு, மாவட்ட ஊராட்சி குழு நிதியிலிருந்து தாசன் கொட்டாய் கிராமத்தில் சிமெண்ட் சாலை அமைப்பதற்காக ரூ.6.50 லட்சம் என ஒட்டுமொத்தமாக ரூ.72,27,000 லட்சம் மதிப்பீட்டில் நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் அனைத்தும் தருமபுரி சட்டமன்ற உறுப்பினர் எஸ் பி வெங்கடேஸ்வரன் அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார். அப்பொழுது அங்கிருந்த பொதுமக்கள் உள்ளாட்சி பிரதிநிதிகள் உள்ளிட்ட அனைவருக்கும் இனிப்புகளை வழங்கினார்.
இந்த அடிக்கல் நாட்டு விழா நிகழ்ச்சியின் போது ஊராட்சி மன்ற தலைவர் சிலம்பரசன் வரவேற்புரை ஆற்றினார். முன்னிலை சாந்த மூர்த்தி மாநில துணைத்தலைவர், மகேஸ்வரி பெரியசாமி நல்லம்பள்ளி ஒன்றிய குழு தலைவர், சரஸ்வதி முருகசாமி மாவட்ட குழு துணை தலைவர், அறிவழகன் முன்னாள் மாவட்ட கவுன்சிலர், கணேசன் ஒன்றிய கவுன்சிலர், பழனியம்மாள் முருகேசன் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர், ரஞ்சித் குமார் துணை தலைவர் முனுசாமி ஒன்றிய செயற்குழு உறுப்பினர் மற்றும் ஒன்றிய மாவட்ட கிளை பொறுப்பாளர்கள் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.