சூலூர் அருகே கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் அமையும் இடத்தில் அதிகாரிகள் திடீர் ஆய்வு
- சுத்திகரிக்கும் நீரை எவ்வாறு கொண்டு வருவது, வெளியேற்றும் வழிகள் ஆகியவை குறித்து ஆலோசனை
- வருவாய் கோட்டாட்சியர் பண்டரினாதன் மற்றும்பேரூராட்சி தலைவர்கள் பங்கேற்பு
சூலூர்,
சூலூர் சுற்றுவட்டாரத்தில் உள்ள பள்ளபாளையம் பேரூராட்சி, சூலூர் பேரூ ராட்சி, இருகூர் பேரூராட்சி மற்றும் மோப்பிரிபாளையம் பேரூராட்சி பகுதிகளில் கழிவுநீர் சுத்திகரிப்பு மையம் அமைக்க நிலம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலத்தை கோவை மாவட்ட வருவாய் அலுவலர் சர்மிளா தலைமையிலான அதிகாரிகள் ஆய்வு செய்தனர். ஆய்வின் போது, சுத்திகரிக்கும் நீரை எவ்வாறு தேர்வு செய்யப்பட்ட இடங்களுக்கு கொண்டு வருவது அதை வெளியேற்றும் வழிகள் ஆகியவை குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது.
இதில் வருவாய் கோட்டாட்சியர் பண்டரினாதன், சூலூர் தாசில்தார் நித்திலவள்ளி, மோப்பிரிபாளையம் பேரூராட்சி செயல் அலுவலர் பெலிக்ஸ், தலைமை எழுத்தர் சாமிநாதன், பேரூராட்சி தலைவர் சசிகுமார், சூலூர் பேரூராட்சித் தலைவர் தேவிமன்னவன், சூலூர் பேரூராட்சி செயல் அலுவலர் சசிகுமார், பேரூராட்சி தலைமை எழுத்தாளர் கோவிந்தராஜன், பள்ளபாளையம் பேரூராட்சி தலைவர் பி.எஸ்.செல்வராஜ், செயல் அலுவலர் சுந்தர்ராஜன், தலைமை எழுத்தர் கிருஷ்ணன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.