கோப்புபடம்
பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த அரசு ஊழியர்கள் கோரிக்கை
- 21 மாத நிலுவைத் தொகையை உடனடியாக வழங்கிட வேண்டும்.
- சாலைப் பணியாளா்களின் 41 மாத பணி நீக்க காலத்தை பணி காலமாக அறிவிக்க வேண்டும்.
திருப்பூர்:
தமிழ்நாடு அரசு ஊழியா் சங்கத்தின் பல்லடம் வட்டக் கிளையின் 15 -வது பேரவைக் கூட்டம் பல்லடத்தில் நடைபெற்றது.இக்கூட்டத்துக்கு வட்ட கிளைத் தலைவா் பாண்டியம்மாள் தலைமை வகித்தாா்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்களின் விவரம் வருமாறு:- 21 மாத நிலுவைத் தொகையை உடனடியாக வழங்கிட வேண்டும். பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். முடக்கப்பட்ட சரண்டா் விடுப்பு அகவிலைப்படி ஊதியத்துடன் நிலுவை தொகையையும் வழங்க வேண்டும்.சாலைப் பணியாளா்களின் 41 மாத பணி நீக்க காலத்தை பணி காலமாக அறிவிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
மாவட்ட செயலாளா் பாலசுப்பிரமணியம், வட்ட கிளைச் செயலாளா் ஆறுச்சாமி, பொருளாளா் ஜெயகுமாரி, மாவட்ட சத்துணவு ஊழியா் சங்கத்தலைவா் ராணி, மாவட்டச் செயலாளா் முருகேசன் உள்பட பலா் கலந்துகொண்டனா்.