உள்ளூர் செய்திகள்
பூட்டிய வீட்டில் மூதாட்டி பிணம்: போலீசார் விசாரணை
- சாந்தம்மாளின் மகன் சென்னை கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் தங்கி சிகிச்சை பெற்று வந்தார்.
- பூட்டி இருந்த சாந்தம்மாளின் வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியது.
திருவள்ளூர்:
திருவள்ளூரை அடுத்த வெண்மனம்புதுார் கிராமத்தை சேர்ந்தவர் சாந்தம்மாள்(வயது80). இவர் மகனுடன் வசித்து வந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட சாந்தம்மாளின் மகன் சென்னை கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் தங்கி சிகிச்சை பெற்று வந்தார். இதனால் வீட்டில் சாந்தம்மாள் மட்டும் தனியாக இருந்தார்.
இந்த நிலையில் பூட்டி இருந்த சாந்தம்மாளின் வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியது. இதனால் சந்தேகம் அடைந்த அப்பகுதி மக்கள் கடம்பத்தூர் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் கதவை உடைத்து பார்த்தபோது வீட்டில் உள்ள அறையில் சாந்தம்மாள் பிணமாக கிடந்தார். அவர் எப்படி இறந்தார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.