உள்ளூர் செய்திகள்

பெரியார் பல்கலைக்கழக நூலகர் ஜெயபிரகாஷ், குத்து விளக்கு ஏற்றி கருத்தரங்கத்தை தொடங்கி வைத்த போது எடுத்த படம்.

நூலக துறை சார்பில் வழிகாட்டி கருத்தரங்கம்

Published On 2022-11-24 14:53 IST   |   Update On 2022-11-24 14:53:00 IST
  • மாவட்ட அளவிலான வழிகாட்டி என்ற பெயரில் கருத்தரங்கம் பெரியார் பல்கலைக்கழக கலையரங்கில் நடை பெற்றது.
  • ரோடரக்ட் சங்கம் ஜெம்ஸ் தலைவர் ரோடரக்டர் ஹரிபிரசாத், வரவேற்று பேசினார்.

கருப்பூர்:

பெரியார் பல்கலைக்கழக நூலக துறையும்,  ரோடரக்ட் சங்கம் ஜெம்ஸ், சேலம் ரோட்டரி சங்கம், திருவள்ளுவர் நூலக வாசகர் வட்டம், ஆகியவை இணைந்து மாவட்ட அளவிலான வழிகாட்டி என்ற பெயரில் கருத்தரங்கம் பெரியார் பல்கலைக்கழக கலையரங்கில் நடை பெற்றது.ரோடரக்ட் சங்கம் ஜெம்ஸ் தலைவர் ரோடரக்டர் ஹரிபிரசாத், வரவேற்று பேசினார்.

இதில் பெரியார் பல்கலைக்கழக நூலகர் ஜெயப்பிரகாஷ் பங்கேற்று, இளம் மாணவர்கள் மத்தி யில் பரவிக்கிடக்கும் இணையதள மோகத்தில் இருந்து எவ்வாறு தங்களை பாதுகாத்துக் கொள்வது பற்றியும், சமுதாயத்திற்கு இளைஞர்கள் ஆற்ற வேண்டிய கடமைகள் குறித்தும்,இன்றைய தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியில் மாணவர்கள் பங்கு கொண்டு இந்த சமுதாயத்திற்கு தங்களால் முடிந்த உதவிகளை சுயநலம் இல்லாமல் பொதுமக்களுக்கும் சமுதாயத்திற்கும் பயனுள்ள வகையில் செயல்பட வேண்டும் என கூறினார்.

ரோட்டரக்ட் மாவட்ட தலைவர் ரோட்டேரியன் ஹரிதாஸ், வாழ்த்துரை வழங்கினார். கருத்தரங்கில் மாணவர்கள், ரோட்டரி சங்க நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர் . முடிவில் பாலசுப்பிரமணியம் நன்றி கூறினார்.

Tags:    

Similar News