உள்ளூர் செய்திகள்

படப்பை அருகே மனைவியை கொலை செய்த கணவர் போலீசில் சரண்

Published On 2024-12-07 09:00 GMT   |   Update On 2024-12-07 09:12 GMT
  • கோபால் ராஜ், மனைவியின் நடவடிக்கையில் சந்தேகம் ஏற்பட்டு பரமேஸ்வரியிடம், தகராறில் ஈடுபட்டுள்ளார்.
  • போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

படப்பை:

காஞ்சிபுரம் மாவட்டம் படப்பை அடுத்த மாடம் பாக்கம், தாய்மூகாம்பிகை நகரைச் சேர்ந்தவர் கோபால் ராஜ் (33). இவர் அதே பகுதியில் பழைய இரும்பு கடை நடத்தி வருகிறார். இவரது மனைவி பரமேஸ்வரி (26), இருவருக்கும் திருமணம் நடந்து 10 வயதில் மகனும், 6 வயதில் மகளும் உள்ளனர். கோபால்ராஜிக்கு மது அருந்தும் பழக்கம் உண்டு.

இந்த நிலையில் மதுபோதையில் வீட்டிற்கு வந்த கோபால் ராஜ், மனைவியின் நடவடிக்கையில் சந்தேகம் ஏற்பட்டு பரமேஸ்வரியிடம், தகராறில் ஈடுபட்டுள்ளார். ஒரு கட்டத்தில் ஆத்திரம் அடைந்த அவர், பரமேஸ்வரியை கழுத்தை நெரித்து கொலை செய்துவிட்டு, மணிமங்கலம் காவல் நிலையத்தில் சரணடைந்தார்.

அவர் அளித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற மணிமங்கலம் போலீசார் பரமேஸ்வரியின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் குறித்து கோபால்ராஜிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News