எடப்பாடி பகுதியில் கனமழையால் நெல், வாழை, பருத்தி பயிர்கள் சேதம்
- நேற்று இரவு திடீரென கனமழை பெய்தது.
- இதனால் நகரின் தாழ்வான பகுதிகளில் மழை நீர் ஆறு போல் ஓடியது.
எடப்பாடி:
எடப்பாடி சுற்று வட்டார பகுதியில் கடந்த சில நாட்களாக மழை பொழிவு ஏதுமின்றி வறண்ட வானிலை நிலவி வந்தது., இந்த நிலையில், நேற்று இரவு திடீரென கனமழை பெய்தது. இதனால் நகரின் தாழ்வான பகுதிகளில் மழை நீர் ஆறு போல் ஓடியது.
பல இடங்களில் சாலைகளில் மழை நீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு இடையே பயணித்தனர். திடீர் கனமழையால் எடப்பாடி அடுத்த காவிரி வடிநிலப் பகுதிகளான மோளப்பாறை, ஓடைக்காட்டூர் மற்றும் நெடுங்குளம் சுற்றுவட்டார பகுதிகளில் பயிரிடப்பட்டிருந்த நெல், வாழை, கரும்பு, பருத்தி உள்ளிட்ட பயிர்கள் மழை நீரில் மூழ்கி சேதம் அடைந்தன.
அப்பகுதி வயல்களில் தேங்கிய நீரை விவசாயிகள் அப்புறப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். சுற்றுவட்டார பகுதிகளில் அதிக அளவிலான மானாவாரி நிலங்களில் தற்போது நிலக்கடலை பயிர் செய்யப்பட்டுள்ள நிலையில், பூ பிடிக்கும் தருவாயில் உள்ள நிலக்கடலை பயிர்களுக்கு திடீர் மழை சாதகமான சூழ்நிலையை ஏற்படுத்தி உள்ளதாகவும் விவசாயிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.