உள்ளூர் செய்திகள்
பேனா நினைவு சின்னம்- சிறப்பு அதிகாரி நியமனம்
- ஓய்வு பெற்ற பொதுப்பணித்துறை தலைமைப் பொறியாளர் விஸ்வநாதன் சிறப்பு அதிகாரியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
- நினைவிடங்கள், நினைவுச் சின்னங்கள் கட்டுமான பணிகள் போன்றவற்றுடன் டெல்லியில் உள்ள தமிழ்நாடு வைகை இல்லத்தை புதுப்பிக்கும் பணிகளையும் விஸ்வநாதன் கண்காணிப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை:
கருணாநிதி பேனா நினைவு சின்ன கட்டுமானப் பணிகளை ஒருங்கிணைக்க சிறப்பு அதிகாரியை நியமனம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
அதன்படி, ஓய்வு பெற்ற பொதுப்பணித்துறை தலைமைப் பொறியாளர் விஸ்வநாதன் சிறப்பு அதிகாரியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். நினைவிடங்கள், நினைவுச் சின்னங்கள் கட்டுமான பணிகள் போன்றவற்றுடன் டெல்லியில் உள்ள தமிழ்நாடு வைகை இல்லத்தை புதுப்பிக்கும் பணிகளையும் விஸ்வநாதன் கண்காணிப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பான உத்தரவை பொதுப்பணித்துறை வெளியிட்டுள்ளது.