உள்ளூர் செய்திகள்
பசும்பலூர் திரவுபதி அம்மன் கோவில் தீமிதி திருவிழா
- கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு காப்புக்கட்டுதல் நிகழ்ச்சியுடன் திருவிழா தொடங்கியது.
- ஒவ்வொரு நாளும் மகாபாரதம் படிக்கும் நிகழ்ச்சி மற்றும் விநாயகர் வனம், அட்சய பாத்திரம், அர்ச்சுனன் தவசு, பூவெடுப்பு, குறவஞ்சி நாடகம், திணை விதைத்தல் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
பெரம்பலூர் :
பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டையை அடுத்துள்ள பசும்பலூரில் திரவுபதி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் கடந்த 13 ஆண்டுகளுக்கு பிறகு இந்த ஆண்டு தீமிதி திருவிழா நடத்துவது என கிராமமக்கள் முடிவு செய்தனர்.
இதையொட்டி கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு காப்புக்கட்டுதல் நிகழ்ச்சியுடன் திருவிழா தொடங்கியது. ஒவ்வொரு நாளும் மகாபாரதம் படிக்கும் நிகழ்ச்சி மற்றும் விநாயகர் வனம், அட்சய பாத்திரம், அர்ச்சுனன் தவசு, பூவெடுப்பு, குறவஞ்சி நாடகம், திணை விதைத்தல் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
விழாவின் சிகர நிகழ்ச்சியான அரவான் களப்பலி, மாடு திருப்புதல் மற்றும் தீமிதி திருவிழா இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை விழா குழுவினர் மற்றும் பொதுமக்கள் செய்து வருகிறார்கள்.