உள்ளூர் செய்திகள்

தூத்துக்குடி திருச்செந்தூர் சாலையில் விபத்தில் 3 பேர் பலியான இடத்தில் எஸ்.பி. பாலாஜி சரவணன் ஆய்வு மேற்கொண்ட காட்சி.

தூத்துக்குடியில் 2 நாளில் 6 பேர் பலி : சாலை விபத்துகள் தொடர்பாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆய்வு

Published On 2022-09-12 15:01 IST   |   Update On 2022-09-12 15:01:00 IST
  • தூத்துக்குடி முத்தையாபுரம் துறைமுக சாலை பகுதியில் புதிய பாலம் வேலை நடைபெற்று வருகிற இடத்தில் அடிக்கடி விபத்து நடந்து வருகிறது.
  • திருச்செந்தூர் சாலையில் நடந்த விபத்தில் ஒரே வாகனத்தில் வந்த 3 பேர் உட்பட இரண்டு நாளில் மொத்தம் 6 பேர் விபத்துக்களில் உயிரிழந்துள்ளனர்.

தூத்துக்குடி:

தூத்துக்குடி முத்தையாபுரம் துறைமுக சாலை பகுதியில் புதிய பாலம் வேலை நடைபெற்று வருகிற இடத்தில் அடிக்கடி விபத்து நடந்து வருகிறது.

இப்பகுதியில் புதுமாப்பிள்ளை ஒருவர் விபத்தில் உயிரிழந்தார். துறைமுகம் கேட் வ.உ.சி.சிலை அருகே நடந்த விபத்தில் மெக்கானிக் பலியானார். அத்திமரப்பட்டி சாலையில் நடந்த விபத்தில் கல்லூரி மாணவன் பலியானார்.

அதேபோல் திருச்செந்தூர் சாலையில் நடந்த விபத்தில் ஒரே வாகனத்தில் வந்த 3 பேர் உட்பட இரண்டு நாளில் மொத்தம் 6 பேர் விபத்துக்களில் உயிரிழந்துள்ளனர்.

விபத்துக்கள் குறித்து சம்பந்தப்பட்ட போலீஸ் நிலையங்களில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது இந்நிலையில் தூத்துக்குடி பகுதியில் விபத்துக்களை கட்டுப்படுத்துவது குறித்து விபத்து நடைபெற்ற இடங்களில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.

இதில் தூத்துக்குடி நகர காவல் துணை கண்காணிப்பாளர் சத்யராஜ், தென்பாகம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜாராம், சப்-இன்ஸ்பெக்டர் சிவக்குமார், நகர உட்கோட்ட தனிப்பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் ஞானராஜன் மற்றும் போலீசார் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News