உள்ளூர் செய்திகள்

காஞ்சிபுரத்தில் 21-ந் தேதி மின்தடை

Published On 2024-12-19 06:57 GMT   |   Update On 2024-12-19 06:57 GMT
  • மின் நிலையத்தில் வருகிற (சனிக்கிழமை) அன்று பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது.
  • செவிலி மேடு, பாலாறு தலைமை நீரேற்றம், சங்குசாபேட்டை ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை மின் தடை ஏற்படும்.

காஞ்சிபுரம்:

ஓரிக்கை துணை மின் நிலையத்தில் வருகிற 21-ந் தேதி (சனிக்கிழமை) அன்று பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது.

அந்த நேரத்தில் காஞ்சிபுரம் நகரில் சில பகுதிகளான, வள்ளல் பச்சையப்பன் தெரு, கீரை மண்டபம், ரங்கசாமி குளம் பகுதிகள், காமராஜர் வீதி, மேட்டுத்தெரு, சின்ன காஞ்சிபுரம், பெரியார் நகர், தேனம்பாக்கம், முத்தியால்பேட்டை, களக்காட்டூர் பகுதி, திருக்காலிமேடு, சேக்குப்பேட்டை வடக்கு, தெற்கு மற்றும் நடுத்தெரு, எண்ணைக்கார தெரு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள், டோல்கேட், விஷார், மாமல்லன் நகர், காந்திரோடு, ஐயம்பேட்டை, வேளிங்கப்பட்டரை, டி.கே.நம்பி தெரு, டெம்பிள் சிட்டி, வர்தமான் நகர், நாகலுத்து மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதி விளக்கொளி பெருமாள் தெரு, ஓரிக்கை, ஓரிக்கை தொழிற்பேட்டை, அண்ணா குடியிருப்பு, சதாவரம் மாவட்ட கலெக்டர் அலுவலகம் சுற்றியுள்ள பகுதிகள், செவிலி மேடு, பாலாறு தலைமை நீரேற்றம், சங்குசாபேட்டை ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை மின் தடை ஏற்படும். இந்த தகவலை காஞ்சிபுரம், வடக்கு கோட்ட செயற்பொ றியாளர் தெரிவித்து உள்ளார்.

Tags:    

Similar News