உள்ளூர் செய்திகள்

கோத்தகிரி சிவன் கோவிலில் பிரதோஷம்

Published On 2023-07-02 14:21 IST   |   Update On 2023-07-02 14:21:00 IST
  • சிவபெருமானுக்குரிய அஷ்ட விரதங்களில் பிரதோஷம் மிகவும் சிறப்பு வாய்ந்தது.
  • சிவபெருமானுக்கு பால், தேன், பஞ்சாமிர்த அபிஷேகம் நடத்தப்பட்டது.

அரவேணு,

தமிழகத்தில் சிவபெருமானுக்குரிய அஷ்ட விரதங்களில் சோமவார பிரதோஷம், மிகவும் சிறப்பு வாய்ந்தது. இது திங்கட்கிழமையில் வரும் பிரதோஷம் ஆகும். இது மற்ற நாட்களில் வரும் பிரதோஷத்தை விட சிறப்பு வாய்ந்தது. அப்போது சிவபெருமானை வழிப ட்டால் பக்தர்கள் நினைத்தது நடக்கும் என்று ஐதிகம்.

இதன் ஒருபகுதியாக கோத்தகிரி சக்திமலை முருகன் கோவில் வளாகத்தில் உள்ள சிவன் கோவிலில் சோமவார பிரதோஷம் அனுசரிக்கப்பட்டது. அப்போது அதிகாலை நேரத்தில் ஹோமம் நடந்தது.

அதன்பிறகு மாலை நேரத்தில் சிவபெருமானுக்கு பால், தேன், தயிர், சந்தனம், பன்னீர், திருநீறு மற்றும் பஞ்சாமிர்த அபிஷேகம் நடத்தப்பட்டது.இதனை தொடர்ந்து சுவாமிக்கு வில்வம், அரளி, தாமரை, மல்லிகை மலர்களால் அர்ச்சனை செய்து தீபாராதனை காண்பிக்கப்பட்டது. அடுத்தபடியாக சிவபெருமானின் வாகனம் நந்தி தேவருக்கும் எண்ணெய், பால், தயிர், சந்தனம், இளநீர் அபிஷேகம் செய்து, அருகம்புல் சாற்றி மலர் அலங்காரம் செய்து, அர்ச்சனை மற்றும் தீபாராதனை நடத்தப்பட்டது.

கோத்தகிரி சக்திமலை சிவன் கோவில் சோமவார பிரதோஷ பூஜையில் திரளான பக்தர்கள் விரதமிருந்து கலந்துகொண்டு லிங்கேஸ்வரரை பக்திப்பரவசத்துடன் தரிசனம் செய்தனர். இதனை தொடர்ந்து பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.

Tags:    

Similar News