உள்ளூர் செய்திகள்
லாரியை சிறைபிடித்து பொதுமக்கள் போராட்டம்
- புத்தூர் கடைவீதி பகுதியில் கடும் துர்நாற்றத்துடன் சென்ற லாரியை பொதுமக்கள் சிறைபிடித்தனர்.
- கழிவுநீர் மீண்டும் கொட்டாதவாறு ஓட்டுனர் நுழைவு பகுதியை அடைத்தார்.
சீர்காழி:
சீர்காழியிலிருந்து தூத்துக்குடி நோக்கி மீன் லாரி சென்றது.
மீன்களை பதப்படுத்தும் வகையில் குளிர்சாதனபெட்டி வசதிகொண்ட அந்த லாரியிலிருந்து சாலைமுழுவதும் துர்நாற்றத்துடன் மீன்கழிவுநீர் கொட்டிக்கொண்டே சென்றது.
இதனால் பொது மக்கள் ஆத்திரமடைந்தனர்.
பின்னர் புத்தூர் கடைவீதி பகுதியில் கடும் துர்நாற்றத்துடன் சென்ற லாரியை பொதுமக்கள் சிறைபிடித்து ஓட்டுனரிடம் வாக்குவாதத்தில் ஈடுப்பட்டனர்.
பின்னர் மீன் கழிவுநீர் மீண்டும் கொட்டாதவாறு ஓட்டுனர் நுழைவுபகுதியை அடைத்தார்.
அதன்பின்னர் பொது மக்கள் வாகனத்தை விடுவித்தனர்.
இது குறித்து பொதுமக்கள் கொள்ளிடம் காவல்துறையினருக்கு தகவல் அளித்தனர். அவர்கள் விசாரணை நடத்தி வருகின்றனர்.